பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/204

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

தமிழ் வளா்ச்சியில் கூரியா் பங்குவாழும் பண்பாடு

இவை மட்டுமன்றி, தமிழ்க் "கூரியர்" இதழின் ஆசி ரியர் திரு.மணவை முஸ்தபா அவர்களின் பெருமுயற்சியின் விளைவாக "தமிழரின் வாழும் பண்பாடு" (the living culture of the Tamils) என்ற மையப் பொருளில் ஒரு "கூரியர் சிறப்பிதழ் 1984 ஆம் ஆண்டு தமிழ் உட்பட 35 உலகமொழிகளில் வெளிவந்தது. இதன் மூலம் தமிழரின் பண்பாட்டுச் சிறப்புகளை "கூரியர்" உலகறியச் செய்தது. பல உலகத்தமிழ் மாநாடுகள் சாதிக்க முடியாத சாதனையைத் "கூரியர்" தமிழ் இதழ் சாதித்துத் தமிழ்ப்பண்பாட்டின் வாழும் பெற்றியை உலகெலாம் பரவ வகை செய்தது. இதே போன்று, திரு. முஸ்தபா மீண்டும் 5 ஆண்டுகள் அரிதின் முயன்று 1989 இல் "இந்தியா" பற்றிய கூரியர் சிறப்பிதழ் 30 உலக மொழிகளில் வெளிவரக் காரணமாக இருந்தார். இது இந்தியாவின் கடந்தகாலச் சிறப்பையும் நிகழ்கால முன்னேற்றத்தையும் உலகுக்குத் தெளிவாக எடுத்துரைத்தது.

இவ்வாறு கூரியர் தமிழ் இதழ் உலகெங்கும் வளர்ந்தோங்கும் அறிவியல், கலை, நாகரிக, வரலாற்றுச் செய்தி களை எல்லாம் தமிழில் வகை வகையாக வழங்கித் தமிழ் உலகிற்குத் திருத்தொண்டுச் செய்து வருகிறது. கடந்த 32 ஆண்டுகளாக அறிவியல் கட்டுரைகளைத் திட்பமுடன் தமிழில் வழங்கி வருவதன் மூலம் 'கூரியர்' இதழ், தமிழ் 'ஓர் அறிவியல் மொழி' என்பதை உலகுக்கு நேரடியாக எண்பித்து வருகிறது. 'கூரியர்' இதழ் மூலம் உலகப் பெரும் மொழிகளுக்கு இணையான இடத்தைத் தமிழ் பெற முடிந்தது. இதன் மூலம் இந்திய மொழிகளுள் பன்னாட்டு அரங்கில் ஓர் உயர் இடத்தைப் பெற்ற ஒரே மொழி என்ற தனிப் பெருஞ்சிறப்பும் தமிழுக்குக் கிடைத்துள்ளது. கவிஞர் மு.மேத்தா கூறியிருப்பது போல்,