பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

மணவையாரின் இஸ்லாமிய இலக்கியப் பணி




மேலும் தினமணிக்கு ஆசிரியர் எழுதிய கட்டுரையோ-அவர்கள் கொடுத்த ஊக்கமாகச் செயல்பட்டது. 'படைக்கப்பட்டவை அனைத்தும் அல்லாஹ்வின் குடும்பமே' என்ற பெருமானர் (சல்) வாக்கினைக் கொண்டு தொடங்கும் இந்நூல், முழுக்கச் சமய நல்லிணக்கச் செய்திகள், வரலாற்றுச் சான்றுகளுடன் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

இஸ்லாத்தைப்பற்றி அறியாதாரே அறியாமல் 'இதனைப் பிற மதங்களின் எதிரி; மதம் மாற்றுவதே இவர்க்குக் கொள்கை; அதற்கு வன்முறைகளையே பயன்படுத்துவர்' என்ற கருத்துகளைப் பரப்பினராதலின், அவை இஸ்லாத்தின் உண்மைத் தத்துவத்தை உணராது சில காலங்களில், சில இடங்களில் நடந்த சில நிகழ்ச்சிகளைக் கொண்டு உருவாக்கியுள்ளனர் என்று ஆசிரியர் நூலெங்கும் அதற்குச் சான்றுகளை கூறிச் செல்லும் பாங்கு அற்புதம். இஸ்லாத்தில் கட்டாயத்திற்கே இடமில்லை என்ற அருமையை வற்புறுத்திச் செல்லும் பாங்கினை அணிந்துரை வழங்கிய அறிஞர் சி. சுப்பிரமணியமும் பாராட்டுகின்றார்.

முன்னுரை எழுதிய நீதிபதி வகாப் அவர்களும், இஸ்லாமியர், இஸ்லாத்தைப்பற்றி இஸ்லாமியர்க்கே எழுதிக் கொண்டும், பேசிக் கொண்டுமிருப்பதைப்போல் இராது, மணவையார் இஸ்லாமியரல்லாதாரும் படிக்க வேண்டும், கருத்துகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடு இனிய எளிய தமிழில் அரபுச் சொற்களைக் குறைத்து எழுதியுள்ளார் எனக் குறிக்கின்றார். மேலும் இஸ்லாத்தையும், இஸ்லாமிய மன்னர்களையும் பற்றிய தவறான கருத்துகளைச் சுட்டிக் காட்டுகிறார் என்று பாராட்டுகின்றார். 'ஏதாயினும் மதக்கலவரம் என வந்தால், அது இரு தனிப்பட்ட மனிதர்களிடையே ஏற்பட்ட