பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். வா சா பானு நூா்மைதீன்

77


போன்ற கால்நடைகளும் மயங்கி நின்ற வரலாறு அறிய முடிகின்றது. குர்ஆன் ஓதுதற்குரிய இசைமுறையே "தஜ்வீத்” என அழைக்கப்பட்டது; கவிதை என்பதே இசை வடிவம்: இசையிலாக் கவிதை, இறக்கையிலாப் பறவை; எனவே குர்ஆனில் இசைத்து ஓதவதற்கேற்ப செப்பலோசைச் சிறப்பு அமைந்துள்ளது; "கவிஞர்கள் வரம்பு மீறுகிறவர்கள்" என்பது கூட, அவர்களின் சுதந்திரச் சிந்தனையைக் காட்டத் தான் சொல்லப்பட்டதாய்ப் பொருள் கூறுவர்; கவிஞர்களைக் கண்ணியப்படுத்தவே ‘அஷ்ஷுஅரா’ என்ற தனி அத்தியாயம் (26வது) குர்ஆனில் உள்ளது; இன்றும் புர்தா ஷரீப், வித்ரீய்யா, சுப்ஹான மவ்லித் போன்ற ஏராளமான பாமாலைகள், வரலாற்று இசை நிகழ்வுகள் எல்லாம் இஸ்லாமிய உலகில் பின்னிப்பிணைந்த அதிசய வரலாறு உடையது; கவிதைக்கும், இசைக்கும், இசைவாணர்க்கும் இஸ்லாமே அளித்த பங்கு பெரிது போன்ற கருத்துகள் படிக்கப் படிக்க நமக்கு வியப்பையும் பெருமிதத்தையும் ஊட்டுகிறதெனலாம்.

எப்படிப்பட்ட இசை வெறுக்கப்பட்டது என்பதற்கும் நூல் பல செய்திகளைத் தருகின்றது. உடன்பாடில்லாத இசையையே இஸ்லாம் வெறுத்தது. குறிப்பாக இசைக்கருவிகளை மறுக்கிறது; நெறி இசை - வெறி இசை என்று இருவகையுண்டு; நெறி இசையை ஏற்று, வெறி இசையையே இஸ்லாம் கண்டிக்கின்றது, சிற்றின்ப வேட்கையைத் தூண்டும் அவ்விசையே ஒவ்வாது; கூச்சல், கூட்டொலி, கூட்டிசை, வெறியாடல் இவை விலங்கு நிலைக்கு மக்களை ஆக்கவல்லன என நூல் விளக்குகின்றது.

இக்கருத்துக்களால் இஸ்லாம் மார்க்கத்தில் இன நலம் மிக்க புனிதமான இசைப் பிரபந்தங்கள் தமிழில் உண்டாகியுள்ளதை உணரும் முயற்சியாக இந்நூல் அமைகின்றது. குணங்குடியாரின் ஞானப் பாடல் போன்று, காசிம் புல