பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். வா.சா. பானு நூா்மைதீன்

91




இஸ்லாமிய இலக்கியங்கள் மணிச் சுரங்கம்; தேன் குடம்; கனித் தோப்பு: கதிர்வயல். அந்த மாணிக்கப் புதையல் இனி மண்மூடிக் கிடக்க வேண்டாம்; அதன் ஒளியை, தேன் குடம் சுவையை எல்லோர்க்கம் விருந்தாக்குங்கள்; பழத்தோட்டத்தின் பயன் நுகர்ந்து, கதிர் வயலின் செந்நெல் உணவுண்டு, புது சத்துப் பாய்ச்சிய இலக்கிய நாளங்கள், நாடிகள், நரம்புகள் தெறிக்கும் வள உடலை, உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்-என வாழ்த்தி நம்மை வளரத் தூண்டும் மணவையாரின் இலக்கியப் பணி, ஏழ்கடல் சூழினும் தன்மணங் கொண்டு இசை பெற வாழிய என வாழ்த்தத் தோன்றுகின்றது.