பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92




சிறுவர் இலக்கியத்தில்
மணவையார் பங்கு

டாக்டர். பூவண்ணன்


எண்ணம் மாற்றிய எழுத்து வேந்தர்

"பெரியவர்களுக்காக நாவல் எழுதுகிறவர்கள், சிறுவர்களுக்கும் சில நாவல்கள் எழுதலாமே என்று எழுதுவதில்லை. பெரியவர்களுக்காக நாடகம் எழுதுபவர்கள் சிறுவர்களுக்கும் சில நாடகங்கள் எழுதலாமே என்று எழுதுவதில்லை. பெரியவர்களுக்காகக் கட்டுரைகள் எழுதுபவர்கள், சிறுவர்களுக்காகக் கட்டுரைகள் எழுதலாமே என்று எழுதுவதில்லை. ஆனால், பெரியவர்களுக்காகக் கவிதை எழுதுபவர்கள், சிறுவர்களுக்காக சில கவிதைகள் எழுதுகிறார்கள். பிள்ளைகளிடம் இரங்கும் கருணை உள்ளம் கவிஞர்களிடமே உள்ளது. பிள்ளைகளே நாளைய பிரபஞ்சத்தை வாழ்விக்கப் போகிறவர்கள் என்னும் உண்மையை உணர்ந்தவர்கள். அதனால்தான் பாரதியார், பாரதிதாசன், கவிமணி, வாணிதாசன், தமிழ் ஒளி முதலிய கவிஞர் பெருமக்கள் பெரியோர்களுக்காகக் கவிதை புனைந்ததுடன் சிறியோர்களுக்காகவும் கவிதைகள் புனைந்தனர்"

மேலே கண்டது பாவேந்தர் நூற்றாண்டு விழாவை ஒட்டி குமரி அனந்தன் ஓராண்டு நடத்திய பாவேந்தர் தொடர்ச் சொற்பொழிவுகளில் ஒரு வாரம் நான் பங்கு