பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


68 அறிவியல் தமிழ்

பேராசிரியர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியாரின் தமிழ் பயிற்றும் முறை (957, 1964, 1980) அறிவியல் பயிற்றும் முறை ( 957, 1971, 198) கல்வி உளவியல் (1961, 1981) குறிப்பிடத் தக்கவை; மிகச் செல்வாக்குடன் புழங்குபவை. அண்மையில் இவரது யுனெஸ்கோ: அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்,' (1969) என்ற மொழி பெயர்ப்பு நூலும் வெளிவந்துள்ளது.

தொழில் துறையிலும் அறிவியல் நூல்களை வெளி யிடும் பணி மிகவும் இன்றியமையாதது. ஆலைகளிலும் தொழிற் கூடங்களிலும் அநுபவ வாயிலாகத் தொழிலாளர் பெற்ற அறிவைப் பயன்படுத்தி முறையான அறிவியல் அறிவாக வளர்க்கும் வகையில் நூல்கள் எழுதப்பெறுதல் வேண்டும். இன்று இத்துறையில் ஒரு சில நூல்கள் தோன்றி வருகின்றன. கோவை தொழில் நுட்பக் கல்லூரி தொழில் நுட்பம் (1967) என்ற அருமையான நூலை வெளியிட் டுள்ளது. திரு. வி. அருணாசலம் என்பார் எழுதிய எலக்டிரிக்கல் என்ஜினீயரிங்" (தமிழக அரசின் பரிசு பெற்றது) என்ற நூல் குறிப்பிடத்தக்கது. ரேடியோ மெக் கானிசம்', 'ரேடியோ செய்வதெப்படி?’ என்ற தலைப் புகளிலும் நூல்கள் வெளிவந்துள்ளன.

எதிர்காலத் திட்டங்கள் : அறிவியல் தமிழ் வரலாற்றில் உடனடியாக யேற்கொள்ள வேண்டிய திட்டங்களைப்பற்றி சண்டு ஒரு சில குறிப்புகள் நினைவிற் கொள்ளத்தக்கவை.

கலைச் சொற்களை உருவாக்கி ஒருநிலையாக்கும் பணியில் அறிஞர்கள் ஈடுபட வேண்டும். தனிப்பட்டோரும், அமைப்புகளும் இதில் பங்கு பெறலாம். எந்த நூல் வெளி வரினும் அதில் வரும் கலைச்சொற்களை அகர வரிசையில் நூலின் இறுதியில் தொகுத்து வெளியிடும் வழக்கம் அமைதல் வேண்டும். இதனால் பலருக்கும் சொற்களை அறிய வாய்ப்பு ஏற்படும். நாளாவட்டத்தில் ஏற்ற சொற்கள் நிலைத்து நின்று, பொருந்தாச் சொற்கள்