பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவியல் தமிழ் 9%

மறைந்து போகும். கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பல்வேறு துறையினரும் ஒரே மாதிரியாகப் பொதுவான கலைச் சொற்களைத் தமிழாக்கம் செய்தல் வேண்டும். பல மாவட்டங்களில் பாமரர் வாக்கில் வாய் மொழியாகப் பயின்று வரும் தொழில் துணுக்கக் கலைச் சொற்களைத் தொகுத்து வெளியிடும் பணி மேற்கொள்ளத் தக்கிது. அதிகமாக நூல்களை வெளியிடும் அரசு இதில் நல்ல கவனம் செலுத்த வேண்டும். -

அறிவியல் விரைந்து வளரும் இன்றைய சூழலில் தமிழில் உருவாக்கப்பெறும் நூல்கள், மொழி பெயர்ப்பு நூல்களாயினும் சரி, முதல் நூல்களாயினும் சரி, அவை அண்மைக் கால வளர்ச்சி வரை எடுத்துக் காட்டுவனவாக இருத்தல் வேண்டும். அறிவியல் நூல்களை மொழி பெயர்ப்போர் அறிவியலறிவு, முதல் மொழி அறிவு, தமிழறிவு இம்மூன்றும் பெற்றவராக அமையின் மிக நன்று, இம்மூன்றும் ஒரு சேரப்பெற்றவர்கிடைப்பது அருமையினும் அருமை இன்று வெளி வந்துள்ள பல நூல்களில் தெளிவும் நீரோட்டமான நடையும் காணப்பெறாததற்கு இக் குறையே முக்கிய காரணமாகும் இந்நூல்களில் கருத்துகள் மொழி பெயர்க்கப்பெற்று விடினும் கனமான ஆங்கிலச் சாயல் படிந்த ஒரு செயற்கையான தமிழ் நடை கையாளப் பெறுகின்றது; படிப்போரின் கருத்துணர்தலுக்கு இது பெருந்தடையாக உள்ளது. எதிர்காலத்தில் இந்நடை தவிர்க்கப் பெறுதல் வேண்டும்.

இறுவாய் : இன்று எங்கும் தமிழ் முழக்கம் கேட்கப் பெறுகின்றது. தமிழுணர்ச்சி பொங்கி வழிகின்றது. இந்த உணர்ச்சி ஆற்றில் கரைத்த புளி போலாகாமல், காற்றில் கரையும் கற்பூரம் போலாகாமல், உருப்படியாக துறை களில் செயற்படுதல் வேண்டும். பாரதியாரின்,