பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 அறிவியல் தமிழ்

"உற்றான் அளவும் பிணி அளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்."

என்று குறிப்பிடுவர் வள்ளுவர். இங்ங்ணம் பல கருத்துகள் இவண் கூறப்பெறுகின்றன.

கண் முதலிய நுட்பமான பகுதிகளில் இரும்புத் தூள் முதலியவை புகுந்து கொண்டால் காந்தத்தைக் கொண்டு இக் காலத்தில் சிகிச்சை செய்கின்றனர். பண்டையோரும் இம் முறையை அறிந்திருந்தனர் என்பதைக் கம்பன் காட்டு கின்றான். இராவண வதம் முடிந்த பிறகு தயரதன் உம்பருலகிலிருந்து நில உலகிற்கு வந்து இராமனுடன் உரையாடும்பொழுது தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றான், இதனைக் கவிஞர்,

  • அன்று கேகயன் மகள்கொண்ட

அரமெனும் அயில்வேல் இன்று காறும் என் இதயத்தின்

இடைநின்ற தென்னைக் கொன்று நீங்கலது இப்பொழுது அகன்றது உன் குலப்பூண் மன்றல் ஆகமாம் காந்தமா மணியின்று வாங் ஐ, . |அயில்வேல்-கூரியவேல்; மன்றல்-மணம், ஆகம்.மார்பு

என்று குறிப்பிடுகின்றான். அன்று கைகேயி தன் இதயத் தில் பாய்ச்சின வரம் என்னும் கூரிய வேல், இன்று இராமனைத் கழுவியதனால் அவன் மார்பாகிய காந்தம் அதனை வாங்கி விட்டது என்று கூறுவதில் நவீன சிகிச்சை முறையின் குறிப்பைக் கண்டு மகிழ்க.

17. குறள்-946. 18. கம்பரா யுத்த மீட்சி. 118