பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ் இலக்கியம் கண்ட அறிவியல் #33

சருவுயிர்த்த மங்கையர் குழந்தையை நீராட்டி மருந்துTட்டி வளர்க்கும் திறம் சிந்தாமணியில் காட்டப் பெற்றுள்ளது.

'காடியாட்டித் தராய்ச் சாறும்

கன்னல் மணியும் நறுநெய்யும் கூடச் செம்பொன் கொளத்தேய்த்துக் கொண்டு நாளும் வாயுறி இப் பாடற் கினிய பகுவாயும்

கண்ணும் பெருக உகிர் உறுத்தித் தேடித் தீந்தேன் திப்பிலிதேய்த்(து)

அண்ணா உறிஞ்சி மூக்கு உயர்த்தார்,'

(காடிகஞ்சி; தராய்ச்சாறு-பிரமிச்சாறு; கன்னல் மணி. கருப்புக்கட்டி; வாயுறிஇ-வாயில் உறுத்தி; பெருக-பெரிதா கும்படி; உகிர் உறுத்தி-நகத்தால் அகலமாகும்படி செய்து; அண்ணா.உள்நாக்கு)

இப் பாடலில் குறிப்பிடப்பெறும் செய்திகளை எண்ணி எண்ணி உணர்க. நவீன மருத்துவர்களும் அறியாத எவ்வளவு செய்திகள் இதில் காட்டப் பெறுகின்றன!

அறிவியல் செய்திகள் யாவும் அறிவினைச் சார்ந்த வை. இலக்கியச் செய்திகள் யாவும் உணர்வை அடிப்படையாகக் கொண்டவை. அறிவியல்பற்றிய தனி நூல்கள் தோன்றி யிருந்து அவை நமக்குக் கிடைக்குமாயின் பல்வேறு நுட்பமான அறிவியல் துறை பற்றிய செய்திகளை தாம் அறிந்து கொள்ளலாம். இத்தகைய நூல்கள் நமக்கு இதுகாறும் கிடைக்கவில்லை. உணர்வை அடிப்படையாகக் கொண்ட இலக்கிய நூல்களில் அறிவுபற்றிய செய்திகளை

19. சீவகசித். 27.12,