பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழுகையும் ஆன்மிக வாழ்வும் iš?

பிறந்த குழந்தைக்கு அழ வேண்டிய இன்றியமை யாமையும் உண்டு. தாயின் கருவறையிலிருக்குங்கால் குழந்தை உயிர்ப்பதில்லை. அன்னையே அதனைச் செய்து அதற்கு வேண்டிய உயிர்க்காற்றை (Oxygen) நல்குகின்றாள். ஆதலால் கருவறைவாழ்வில் குழந்தை யின் நுரையீரல் (Lungs) செயற்படுவதில்லை. குழந்தை கருவறையினின்றும் வெளிப்போந்ததும், அஃது அழுவதால் நுரையீரல் செயற்படத் தொடங்குகின்றது. பிறந்தவுடன் அஃது அழாவிடில் மருத்துவப் பெண் அதனைக் கிள்ளி யாவது அழ வைக்கின்றாள்; அதன் நுரையீரலைச் செயற்படச் செய்கின்றாள். இந்த உண்மைதான் "குழந்தை அழுததா?’ என்ற வினாவில் அடங்கியுள்ளது. அழுத பிள்ளை பால்குடிக்கும் என்ற பொன்மொழியில் அடங்கிக் கிடக்கும் உண்மையும் இதுதான். பால் குடிக்கும்’ என்பது ஒரு மரபுத் தொடர்; பிழைக்கும் என்பது இதன் பொருள். இங்ஙனம் பிறர் மகிழ அழுது பிழைத்த குழந்தை, தானாக அறிந்த அழுதல் மொழியைத் தன் வாழ்வுக்குப் பயன்படுத்திக் கொள்வதை குழந்தை வாழ்வில் காண் கின்றோம். -

இந்த உலக வாழ்விலும் பலருக்கு இந்த அழுதல் ஒரு கொள்கையாக அமைந்து விடுகின்றது. அழுதலையே ஒரு கொள்கையாக அமைத்துக்கொண்டு சண்டித்தனம் செய்து கல்நெஞ்சக் கணவன்மார்களையும் மனம் நெகிழச் செய்து தம் காரியத்தை முற்றுவித்துக்கொள்ளும் மனைவி மார்களையும் நாம் காணத்தான் செய்கின்றோம். இந்தப் பேருண்மையைக் கையாண்டு கவிஞர்களும் தம் கவிதை களிலும் காவியங்களிலும் சிறந்த சொல்லோவியத்தையும், காவிய மாந்தர்களையும் படைக்கின்றனர். அகநானூற்றில் ஒரு பாடல். தலைவியின் உடன்பாடு பெறாமல் பிரியும் குறிப்பொடு புறப்படுகின்றான் தலைமகன். அவனை

9سم تين . أقي