பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 அறிவியல் தமிழ்

வெள்ளத்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம்

கண்ணிணையும் மரமாம் தீ வினையி னேற்கே." என்று நெஞ்சுருகி அழுவதைக் காண்க. தாயுமான அடிகளும் அழு கையைக் குறித்துப் பல இடங்களில் பேசு கின்றார். கரைந்து கரைந்துருகிக் கண்ணருவி காட்ட, விரைந்து வரும் ஆனந்தமே' என்றும், கரைந்து கரைந் துருகக் கண் ணிர் ஆறாக, விரைந்தே நிற்விகற்பம் எய்தி" என்றும் கூறியிருப்பது காண்க. மேலும்,

என்புருகி நெஞ்சம் இளகிக் கரைந்துகரைந்து அன்புருவாய் நிற்க அலந்தேன் பராபரமே!’ என்றும் நெஞ்சுருகிப் பேசுவர்.

திருமங்கையாழ்வார் தன்னுடைய வாழ்நாட்களிம் பெரும் பகுதி கொன்னே கழிந்தமைக்குக் கழிவிரக்கல் கொண்டு புலம்புகின்றார்.

"ஊமனார் கண்ட கனவிலும் பழுதுஆய்

ஒழிந்தன கழிந்த அந் நாட்கள்" என்பது அவருடைய திருவாக்கு. ஊமையன் ஒருவன் கணாக்கண்டால் அதனை அவன் ஒருவரிடம் வாய்விட்டுச் சொல்லி மகிழ முடியாது. ஆகவே, ஊமையன் கனவுகள் பழுதேயாகும், ஊமன் ஒருவன் தன் கனவை வாய்விட்டுச் சொல்ல முடியாமற் போனாலும், தன் நெஞ்சாவது நினைந்திருந்து மகிழ்தல் கூடும். அங்ங்ணம் தான் தனக்குள்ளேயே மகிழக்கூடிய விஷயமும் ஒன்றில்லாமை யால், ஊமன் கண்ட கனவைவிடத் தன் நாட்கள் வீணாகக் கழிந்தமைக்கு அங்கலாய்க்கின்றார் ஆழ்வார். கடந்த

2. திருவா. திருச்சதகம்-21 3. தாயு. பாடல். 497 4. தாயு. பாடல். 898 5. தாயு. பாடல். 656 இ. பெரி, திரு. 1.1:3