பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

அறிவியல் தமிழ்

“காளநீர் மேகத்தென்
       காட்கரை என்அப்பற்கு
ஆளன்றே பட்டது.என்
       ஆருயிர் பட்டதே”[1]

[ஆள்பட்டது-அடிமைப்பட்டது!]

என்பதேயாகும். இங்ஙனம் தன் உயிர் பட்ட பாட்டை வேறு எவரும் பட்டிருக்க முடியாது என்பதை,

“ஆர்உயிர் பட்டது
எனதுஉயிர் பட்டது”[2]

என்று குறிப்பிடுகின்றார் ஆழ்வார். பகவானுடைய குணங்களுக்கு நிலம் அல்லாததாக இருக்கும் லீலா விபூதியில் (இந்த உலகில்) தான் பட்ட பாட்டினை நித்திய விபூதியில் (பரம பதத்தில்) உள்ள நித்திய சூரிகளும் பட்டிருக்க முடியாது என்பது ஆழ்வாருடைய திருவுள்ளம்.

இதுகாறும் இறைவன் தன்னை உண்டபடியைச் கூறினார் ஆழ்வார். உண்டவனுக்குத் தண்ணீரும் வேண்டுமன்றோ? ஆகையால் இறைவன் தண்ணீர் பருகின படியையும் அருளிச் செய்கின்றார் அவர்.

“‘வாரிக்கொண்டு உன்னை
       விழுங்குவன் காணில்’ என்று
ஆர்வுற்ற என்னை
       யொழியளன் னில்முன்னக்
பாரித்து, தான் என்னை
       முற்றப் பருகினான்;
கார்ஒக்கும் காட்கரை
       அப்பன் கடியனே.”[3]

———————

  1. திருவாய் 9.6:8 16.
  2. திருவாய் 9.6:9
  3. திருவாய் 9.5:10