பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


74 அறிவியல் தமிழ்

"கலைகள், கலைகள் என்று கொண்டாடி நாம் உள்ளம் பூசிக்கின்றோம். அத்தகைய கலைத்திறம் வாய்ந்த பாடல் கள் ஒன்றிரண்டில் ஆழங்கால் படுவோம்.

கதிரவன் உதயம்: கம்பன் காட்டும் உதயசூரியனைக் காண்போம். புகர்முக யானையின் தோலை மேற் போர்த்துக் கொண்டிருக்கும் பரமசிவனைப்போல் மிகுந்த கரிய இருளிலே மறைந்து கிடக்கின்றது. உதய கிரி. அப் பரமசிவனின் நெற்றியில் திறந்து விளங்கும் நெருப்புக் கண்போல் உதயகிரியின் கொடு முடியில் உதித்து விளங்கு கின்றான் பகலவன். ---

螺副

約 隊略 * 曾 极漫感 确球残

சிதையும் மனத்து இடருடைய செங்கமல முகமலரச் செய்ய வெய்யோன் புதையிருளில் எழுகின்ற புகர்முகமா

னையின் உரிவைப் போர்வை போர்த்த உதயகிரி எனுங்கடவுள் துதல்கிழித்த

விழியேபோல் உதயம் செய்தான்: (சிதையும்-நிலைகுலையும்; இடர் துன்பம்; செங்கமலம். செந்தாமரை: வெய்யோன்-சூரியன். புதை இருள் ஆழ்ந்த இருள்; புகர்-செம்புள்ளி; உரிவை-தோல், துதல்-நெற்றி, என்ற பாடற் பகுதியில் இக் காட்சி சித்திரிக்கப் பெற் றிருப்பதைக் கண்டு மகிழ்க. சண்டுக் கரிய இருளின் மீது விளங்குகின்ற வெண்ணிறங் கலந்த சிவந்த வின் மீன்கள் கரிய யானையின் முகத்தில் நிறைந்துள்ள செம் புள்ளிகளாகக் கொள்ளப் பெற்றிருப்பதை நோக்குக. கதிரவனைக் கண்ட மாத்திரத்தில் தாமரை மலர்தலும், அவனைப் பிரிந்த மாத்திரத்தில் அது குவிதலுமாகிய இயல்புபற்றித் தாமரைக் கொடிகளாகிய மகளிர்க்குக் கதிரவனைத் தலைவனாகக் கூறுதல் கவி மரபாகும்,

2. கம்பரா. பாலகா, மிதிலைக் காட்சி.150