பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எழிலுடை இருசுடர் தோற்றம் 27

கண்டு மகிழ்வாயாக’ என்கின்றான். கதிரவன் 'கர, கர' வென்று அடிவானத்தில் சுழன்று இறங்குவதைத் தன் சொற்களால் ஓவியம் தீட்டிக் காட்டுகின்றான் கவிஞன்.

'அடிவானத் தேஅங்கு பரிதிக் கோளம்

அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்; இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி

எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து, முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே,

மெய்குழலாய் சுற்றுவதன் மொய்ம்பு காணாய்! வடிவான தொன்றாகத் தகடி ரண்டு

வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய்'

(பரிதி-சூரியன்; மொய்குழல்-பாஞ்சாலி; மொய்ம்புவன்மை)

கணந்தோறும் இங்ஙனம் நவநவமாகப் புதிய வண்ணம் காட்டி நிற்பதைக் காளி பராசக்தி களிக் கும் கோலமாகக் காண்கின்றான் பாரதி, அம்பிகை யின் திருநடனம் அம்பலவனின் கூத்தினையொத்துக் காணப் பெறுகின்றது. அவளும் வானரங்கில்தான் திருநடனம் புரிகின்றாள். அவள் திருக்கையில் பொன் மயமான வட்டத் தட்டொன்று சுழன்று கொண்டுள்ளது. பத்துக் கோடி மின்னல்களைத் திரட்டி அவற்றை ஒரு குகையில் (Crucible) போட்டு உருக்கி வார்த்து ஒரு வட்டமான தட்டாக ஆக்கி அதனைத் தன் திருக்கரத்தில் தாங்கிக் கொண்டு சுழற்றுகின்றாள் அன்னை பராசக்தி. அன்னையின் அற்புதத் திருநடனத்தை மானசீகமாகக் கண்டு களிக்கும் பாரதி நமக்கு அந்த அற்புத வட்டத் தகட்டை மட்டிலும் காட்டுகின்றான். அவள் கையில்

‘கர, கர வென்று சுழன்று நிற்கும் வட்டத் தட்டே

4. பாஞ்சாவி சபதம்-130