பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுவில் ஆனந்தக் கூத்து 45

வழங்குவர். அணுவில் உட்கருவிற்கும் எலக்ட்ரான்களுக்கும் இடையேயுள்ள மின்னாற்றலைவிட இவ்வாற்றல் பத்து இலட்சம் மடங்கு பெரியது; வன்மையும் வாய்ந்தது. இந்த ஆற்றல்தான் ஹிரோஷிமாவை அழித்தது; நாகசாகியை நாசமாக்கியது. இதுவே அணுக்குண்டில் செயற்படும் மாபெரும் ஆற்றலாகும்.

மேற்கூறியவற்றை ஆழ்ந்து நோக்குங்கால் அண் டத்தின் அமைப்பும் அணுவின் அமைப்பும் ஒன்றுபோல் இருப்பதை அறிகின்றோம். இந்த அகிலத்தைச் சிவமாகக் கொண்டால் சூரியன் சக்தியாகின்றது. அங்ங்ணமே அணுவின் உட்கருவும் சக்தியாகின்றது. ஒருவருடைய உயிர்ப்பு ஆற்றல் அவருடைய தடைபடாத இதயத் துடிப்பில் இருப்பது போலவே, இந்த அகிலத்தின் ஆற்றல் கதிரவனிலும், அணுவின் ஆற்றல் அதன் உட்கருவிலும் அடங்கியுள்ளன. அண்டங்களின் தத்துவமும், அணுவின் தத்துவமும் தில்லைத் திருநடனத் தத்துவத்தில் வைத்து விளக்கப்பெற்றுள்ளன; இவற்றை நமது முன்னோர்கள் அழகான ஆடலரசத் திருவுருவத்தின்மூலம் நமக்கு என்றைக்கும் எடுத்துக் காட்டாக இருக்குமாறு செய், துள்ளனர். திருமூலரும் இதனை, -

எங்குந் திருமேனி எங்குஞ் சிவசத்தி எங்குஞ் சிதம்பரம் எங்குத் திருநட்டம் எங்குஞ் சிவமா யிருத்தலால் எங்கெங்குந் தங்குஞ் சிவனருட் டன் விளையாட்டதே."

என்று விளக்குவர். எங்கும் சிவனுடைய திருமேனியுள்ளது;

பார்க்குமிடந்தோறும் அவனுடைய அருளாற்றல் நீக்கமத நிறைந்துள்ளது. அவன் திருவருளால் நடைபெறும் படைத்

4. திருமந்திரம்-ஒன்பதாத்தத்திரம்-திருக்கூத்து தரிசனம்-1,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/47&oldid=534066" இலிருந்து மீள்விக்கப்பட்டது