பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ அறிவியல் தமிழ்

அழித்து அதன் வேகத்தைத் தணித்தனன். அப்போது அதனைக் கண்டு வியந்த தேவர்களிடம் சிவபெருமான் கூறிய,

  • நாராயண நரர் என்றுஇவர்

உளராய் நமக்கெல்லாம் rேராய்முழு முதற்காரணப்

பொருளாய்” . என்ற வாக்கிலும் இதனைக் காணலாம். சேதுவை அமைக்க வருணனை வழி வேண்டியபொழுது, வருணன் வரத் தாமதித்ததனால், இராமன் சினங்கொள்ளுகின்றான். இதனைக் கவிஞன்,

'உற்றொடு தனியே தானே

தன்கனே உலகம் எல்லாம் பெற்றவன் முனியப் புக்கான்' என்று குறிப்பிடும் இடத்தில் 'இராமனே பரம்பொருள்' என்று தற்கூற்றாகக் கூறுவதைக் காண்க. அடுத்து வருணன் வாயில் வைத்து,

'நவையறும் உலகிற் கெல்லாம்

நாயக நீயே’ என்றும்,

"எள்ளலா காதமூலத்(து)

யாதுக்கும் முதலாய் உள்ள வள்ளலே’’’ என்றும் பின்னும் வற்புறுத்துவன். அங்கதனுக்கு அறவுரை கூறும் வாலியின் கூற்றாக வந்துள்ள,

19. யுத்த நிகும்பலை-141 20. யுத்த வருணனை வழி. 63 21. யுத்து வருணனை வழி-67 22. யுத்த வருணனை வழி-71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/58&oldid=534077" இலிருந்து மீள்விக்கப்பட்டது