பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கம்பன் கண்ட மெய்ப்பொருள் 55

நாராயணனே முதற்கடவுள்: நாராயணனே உலகின் முதற்கடவுள் என்பதைக் கம்ப நாடன் தன் காவியத்தில் பல இடங்களில் வற்புறுத்துகின்றான். சீதை தூயவள் என்று அங்கியங் கடவுள் மெய்ப்பித்த பிறகு தேவர்களின் வேண்டுகோட்கிணங்க நான்முகன் இராமனது உண்மைச் சொரூபத்தை விளக்குகின்றான்.

'மறைகளின் தலைகள்

மன்பெ ரும்பர மார்த்தமென்(று) உரைக்கின்ற மாற்றம்

அன்ப நின்னையல் லால் மற்றிங்கு) யாரையும் அறையா'

(மறைகளின் தலைகள்-உபநிடதங்கள்)

என்ற பாசுரப் பகுதியில் உபநிடதங்கள் குறிப்பிடும் 'பாம்பொருள் திருமாலைக்குறிக்குமேயன்றித்தன்னையோ, சிவனையோ அல்லது இந்திரனையோ குறிக்கவில்லை என்று உணர்த்துவதை அறிக. அடுத்து, சிவபெருமான்,

"முன்னை ஆதியாம் மூர்த்திநீ

மூவகை உலகின் அன்னை சீதையாம் மாதுநின்

மார்பின்வந் தமைந்தாள்’’**

என்பதால் திருமாலே முதற்கடவுள் என்றும், சீதையே உலக அன்னையென்றும் உறுதி செய்வன். இப்பகுதியில் வரும் பாசுரங்கள் யாவும் இக்கருத்தையே பலபடியாக வலியுறுத்துகின்றன. நிகும்பலையைக் குலைத்தபின் இலக்குவனுக்கும் இந்திரசித்துக்கும் நடந்த போரில் பின்னவன் விட்ட நான்முகன் படையை அப்படையாலேயே

17. யுத்த, மீட்சி. 161 18. யுத்த, மீட்சி. 113