பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கம்பன் கண்ட மெய்ப்பொருள் 69

பக்தியுடன் சொன்னவர்களுடைய விருப்பங்களை நிறைவேறச் செய்யும். இதனைச் சொல்லவேண்டும் என்ற எண்ணமேயின்றித் தம் குழந்தைகட்கு இப் பெயரை இட்டு அழைக்கினும், பரிகாசமாகவோ இழிவாகவோ பொரு ளுணர்ச்சியின்றியோ சொல்லினும், இது கொடுக்கும் பலனிலிருந்து தவறாது. இத்தகைய மந்திரத்தின் பெருமையைக் கம்பநாடன்,

'மும்மைசால் உலகுக் கெல்லாம்

மூலமந் திரத்தை, முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும்

தனிப்பெரும் பதத்தை தானே இம்மையே எழுமை நோய்க்கும்

மருந்தினை, இராமன்’ என்னும் செம்மைசேர் நாமத் தன்னை'

என்று சிறப்பித்துப் பேசுவன். மூலமந்திரம் என்பது தலைமையான மந்திரம். உலகுக்கெல்லாம் மூலமந்திரம் இதுவேயாகும். இம்மந்திரத்தைச் செபிப்பார் பரம பதத்தையடைந்து அப்பெருமானுடைய சுயரூபம் முழு வதையும் திரிகரணங்களாலும் அநுபவித்துப் பெருமகிழ்வு அடைவர்.

"சரணம்ஆகும் தனதாள்

அடைந்தார்க்கு எல்லாம்;

மரணம் ஆனால் வைகுந்தம்

கொடுக்கும் பிரான்'

என்று ஆழ்வார் பணித்தபடி எம்பெருமானுடைய அடி யார்கட்கு இப்பிறப்பின் இறுதியிலேயே முக்தி கிடைத்த

67. கிட்கிந். வாவிவதை-71 68 திருவாய் 9.10.5