உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவை. இளஞ்சேரன்

113

இன்றும் வாழ்வதாலும், அவர்தம் கொள்கைகளை ஏற்று அவர்களுக்கு இன்றும் நல்லினமாக உள்ளோர் வாழ் வதாலும் மறுமை வாழ்வு நீடிக்கிறது. இவ்வகையில் இனநலம் மறுமை வாழ்விற்கும் ஏமம் ஆவது, இது,


"மனகலத்தின் ஆகும் மறுமை; மற்றஃதும்
இனகலத்தின் ஏமாப்பு உடைத்து" (459)

என்னும் குறளில் பதியப்பட்டுள்ளது.

'இனநலம் ஏமம்' என்று திருவள்ளுவர் காட்டிய கருத் துக்கள் குமுகாய அறிவியலில் (Social Science) வெளிப்படுத்தப்பட்டுள்ளமை வியக்கத் தக்கதாகும்.

உயிரினத்தோற்றம் அதன் படிமலர்ச்சி (Evolution)யை ஆய்ந்து ஒரு சட்டகம் அமைத்தவர் டார்வின் என்பார். இவர் கொள்கை 'டார்வின் கொள்கை' எனப்படும். இக் கொள்கை வழி ஆய்ந்தோர் பின்வரும் கருத்தை வெளியிட்டனர் :

          "குமுகாயப் படிமலர்ச்சியில் போரும்
          போட்டியும் வேண்டாதவை அல்ல;
                                                 முறையானவையே"

என்றனர்.

ஆனால், இதனை மேலும் ஆராய்ந்த குமுகாயவியலார் அக்சிலி (Huxley) என்பார் இக்கொள்கை தவறு என்று மறுத்து,

          'மாந்தருக்குள் (இனமாகக் கூடும்) கூட்டுறவும்,
          ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதும்
          குமுகாய நலத்திற்கு உதவும்' என்றார்.