பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அறிவியல் திருவள்ளுவம்

வாயின் பேச்சு இயக்கத்தைக் கொண்டே ஒலிவிடுவான்கள், (Computor) மூளையின் இயக்கத்தை வைத்தே இன்று உலகில் உயர்ந்துவரும் கணிப்பொறிகள் என யாவும் உடற்பொறிகளின் ஈனல்களே.

இப்பொருத்தத்துடன் "பொறியின்மை யார்க்கும் பழி யன்று" என்னும் குறளைநுணுகி நோக்கினாலும் இக்காலப் பொறி வளர்ச்சியுடன் ஒப்பிட்டு நோக்கினாலும் பொறிகள் தாம் நாட்டின்-மாந்தரின் வாழ்வையே இயக்கி வாழ வைக்கின்றன என்பதை உணரலாம்.

இச்சமயத்தில் பொறியில்லாமை எந்தநாட்டிற்கும் பெரும்பழியாகும். மிதிவண்டி முதல் பீச்சிப்பாயும் வெடி ஹர்தி (இராக்கெட்) வரை பெறாத நாடு உலகில் பழி கொள்ளும் நாடாகும். ஆனால், பழியின்மை எதனால் ஆன்டாகும். ஆள்வினை என்னும் முயற்சியால்தான் உண்டாகின்றது. ஆள்வினையிலும் அறிவியல் அறிந்தஅறிவறிந்த ஆள்வினையால்தான் உண்டாகின்றது.

எனவே,

"பொறியின்மை" என்னும் குறள் தன் குறிப்புப் பொருளால் அறிவியலின் உள்ளீட்டைக் கொண்டதாகிறது.

இவ்வுள்ளிட்டுப் பொருளைப் பின்வருமாறு வெளிக்கொணரலாம்.

பொறியின்மை மின் ஊர்தி, வான் ஊர்தி,
கணிப்பொறி முதலிய ஆக்கப் பொறிகள் இல்லாமை
யார்க்கும் }