பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்




“திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவை மிசை
படர்பொருள் முழுவதுமாய் அவைய வைதொறும்
உடன்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன.”16[1]}}

என்ற நம்மாழ்வார் பாசுரம் இதனை விளக்கும்.

“திடவிசும்பு எரிநீர் திங்களும் சுடரும்
        செழுநிலத்து உயிர்களும் மற்றும்
படர்பொருள் களும்ஆய் நின்றவன்.”17[2]}}

என்பர் திருமங்கை மன்னன்.

“மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு
        வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீ
தன்னுருவின் மூன்றாய்த் தாழ்புனலின் நான்காய்
        தரணிதலத் தஞ்சாகி”18[3]

என்று கூறுவர், அப்பர் பெருமான். மணிவாசகப்பெருமானும்,


“நிலம்நீர் நெருப்புயிர்
        நீள்விசும்பு நிலாப்பகலோன்
புலனாய மைத்தனோ
        டெண்பகையாப்ப் புணர்ந்துநின்றான்.”19[4]

என்று இவற்றோடு வேறு சிலவற்றையும் சேர்த்துப் பேசுவர்.

பஞ்சபூதங்களால்தான் உலகம் உண்டானது என்பது பண்டைய சமய நூலாரின் கருத்து. இதனை அப்படியே பின்பற்றி,

“வானின்று இழிந்து வரம்பிகந்த
        மாபூ தத்தின் வைப்பெங்கும்
ஊனும் உயிரும் உணர்வுபோல்
        உள்ளும் புறனும் உளன்என்ப.”20[5]

என்று கூறுவான் கம்பநாடன். வான் என்பது மூலப்பிரகிருதி. ‘சுரர் அறிவு அருநிலை’ (திருவாய் 1.1:8) என்ற பாசுரத்தில் ‘விண்முதல் முழுவதும்’ என்ற தொடரில் உள்ள விண் என்னும்


  1. 16. திருவாய் 1-1-7
  2. 17. பெரி.திரு. 4.3:3
  3. 18. அப்பர் தேவாரம் 6.54:5
  4. 19. திருவா, திருத்தோணோக்கம் - 5 (317)
  5. 20. கம்பரா. அயோத்தி - காப்பு.