பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

87


சொல்லுக்குப் பூர்வாசிரியர் மூவப்பிரகிருதி என்று பொருள் கொண்டதையொட்டிப் பொருள் கொள்ளப்பெற்றது. வரம்பு கடந்து பரந்த ஐம்பெரும் பூதங்களின் காரியமாய் பரவியிரா நின்றுள்ள பெளதிகப் பதார்த்தங்கள்தோறும் (ஜகமெங்கும்) உயிரும் உடலும் போலவும், உயிரும் உணர்வும் போலவும் உள்ளும் புறத்தும் உளன் என்று சொல்லுவர். ஞானிகள். இங்கு உணர்வு என்பது தர்மபூத ஞானம். ஆகாயத்திலிருந்து வாயுவும், வாயுவிலிருந்து அக்கினியும், அக்கினியிலிருந்து அப்புவும், அப்பி லிருந்து பூமியும் தோன்றும் முறையை அருமறை கூறுதலால் ‘வானின்றிழிந்து.....மாபூதம்’ என்றார் எனினும் பொருத்தும்.

ஐம்பெரும் பூதங்களைப்பற்றிய செய்தி ‘அநுமன் துதி’ யில் அற்புதமாய்க் காட்டப்பெறுகின்றது.

“அஞ்சிலே ஒன்றுபெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றுஆறுஆக ஆரியற் காக ஏகி
அஞ்சிலே ஒன்றுபெற்றான் அணங்குகண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவன்எம்மை அளித்துக் காப்பான்.”[1]

முதல் ஒன்று - வாயு; இரண்டாவது ஒன்று - அப்பு (சமுத்திரம்); மூன்றாவது ஒன்று - ஆகாயம்; நான்காவது ஒன்று - பூமி ஐந்தாவது ஒன்று - நெருப்பு.

ஐம்பெரும்பூதங்களுள் ஒன்றாகிய வாயு தேவனால் பெறப்பட்டு (1), பஞ்சபூதங்களுள் ஒன்றாகிய ஆகாயத்தின் வழியாக (3), ஐந்து பூதங்களுள் ஒன்றாகிய அப்பைக் (கடலைக்) கடந்து (2), இராமன்பொருட்டு ஐந்து பூதங்களுள் ஒன்றாகிய பூமிதேவி பெற்ற பெண்ணாகிய பிராட்டியைச் சேவித்து (4), அயலார் ஊராகிய இலங்கையில் ஐந்து பூதங்களுள் ஒன்றாகிய நெருப்பை வைத்துச் சென்றான் (5). அநுமன் கருணை செய்து எம்மைப் பாதுகாப்பான். - ஆதலால் அவனை வணங்குவோம் என்பது குறிப்பு.

(4) உலகத்தோற்றம் (சமயக்கருத்து) : (உலகத் தோற்றத்தில் - உலகம் உண்டாதலாகிய காரியத்தில் - ஈகவரனே முதற் காரணம், நிமித்த காரணம், துணைக்காரணம் என்ற மூவகைக் காரணங்களாய் உள்ளான் என்ற வைணவ தத்துவம் கொண்டு அண்டம் உண்டாதவை விளக்கலாம். அசித்து சூக்குமமாய்


  1. கம்பரா. பாலகாண் - அநுமன் துதி - 2.