பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


இவண் கூறப்பெற்ற நான்கும் மக்களால் பின்பற்றப்படாமல் ஏட்டுச் கரைக்காயாய் இருப்பவையாகும்.

5 மீமாம்சை : அருமறைக் கூறுகளை அப்படியே ஏற்றுக் கொள்ளும் சமயங்களுள் மீமாம்சை முன்னோடியானது. மீமாம்சை என்ற சொல் 'முறையாய் ஆராய்தல்' என்ற பொருளுடையது. மீகாம்சை பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை என்ற இருபிரிவுகளையுடையது. முன்னது, வேதத்தின் முதற்பகுதியாகிய பிரமானத்தை அடிப்படையாய்க் கொண்டது. பின்னது, வேதத்தின் இரண்டாம் பிரிவான உபநிடதத்தை அடிப்படையாய்க் கொண்டது. மீமாம்சைபற்றிப் பல நூல்கள் உன்னன. அவற்றுள் மிகவும் பழைமையானது கல்ப சூத்திரம். எனினும், ஜைமினியால் இயற்றப்பெற்ற மீமாம்ச சூத்திரம் மிகவும் முக்கியமானது.

நியாய வைசேடிகர்களைப் போலவே மீமாம்சகரும் உலக ஆக்கத்திற்கான மூலப்பொருள்கள் பல என்ற கருத்தைக் கொண்டவர்கள். உலகப் பொருள்கள்யாவும் உண்மைப் பொருள்கள் என்பதை ஒத்துக்கொள்பவர்கள். இவர்கள் அணுக் கொள்கையை ஏற்பவர்கள். ஐம்பெரும் பூதங்கள் அணுக்களால் ஆனவை என்பதை ஏற்றுக்கொண்டாலும் கண்ணுக்குப் புலப்படும் கூட்டனுக்கனைளத்தாம் அணு என்கின்றனர். ஒற்றை அணுக்கள் இரண்டாகவும் மூன்றாகவும் இணைந்திருக்கும் அணுத் தொகுப்புகளுங்கூட கண்ணுக்குப் புலனாகாமல் உள்ளன என்ற லைசேடிகர்களின் கூற்றை இவர்கள் ஏற்பதில்லை. வேதத்தில் இவர்கள் அழுத்தமான நம்பிக்கையுடையவர்கள்.

ஆன்மாக்கள் பனி என்பதும், அவை என்றும் இருப்பவை என்பதும், எங்கும் நிறைந்தவை என்பதும் இவர்தம் கொள்கை, ஆன்மாவை மனத்தில் உணர முடியும் என்ற கருத்தையுடையவர்கள். ஆன்மாக்களுக்கெல்லாம் தலைமையான பரமான்மா என்ற ஒன்றில்லை என்பது இவர்தம் கருத்தாத லால் பல கடவுள்கள் உள்ளன என்பதும், முழுமுதற்கடவுள் ஒன்றில்லை என்பதும் இவர்தம் கொள்கைகளாகும். இதற்கு இவர்கள் கூறும் பல விளக்கங்களுள் மிக முக்கியமானது பிரத்தியட்சம், அனுமானம், ஆப்த வாக்கியம் என்ற மூன்றாலும் அறுதியிட முடியாது என்பதாகும். வேள்வி புரிவதில் நம்பிக்கை