பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

120

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


பட்டினி நோன்பு : துறவியருக்கு உரிய மகாவிரதம் என்பது இது. துறவியர் பின்பற்ற வேண்டிய மகாவிரதங்கள் என்பவை அனுவிரதங்களின் முற்றிய நிலையாகும். இல்லறத்தார்க்குப் பிறனின் விழையாமை என்று ஓதப்பெற்ற விரதம் துறவறத்தார்க்கு மாணிநிலை (பிரம்மச்சரியம்) என்ற உறுதி வாய்ந்த புலனடக்க நிலையாய் உரைக்கப்பெற்றுள்ளது. பிரம்மச்சரியம் காத்தலை 'ஒருதனி வாழ்க்கை' என்றும். விரதியரை 'உரவோர்' என்றும் சிலம்பு ஒலிக்கும் (14:38) உலகாயதக் கருத்தைக் கண்டிக்கும் பாங்கில் காமம் கடிதலைச் சிலம்பில் காணலாம். (14:39-45).

காமம் கடிதற்கும் தவம் இயற்றற்குரிய ஆற்றலைத் தருவதற்கும் மாணிநிலை தேவையாகும். இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பார்க்கு ஐந்து கட்டளைகள் துவலப்பெற்றுள்ளன. அவை: (1) பெண்ணைப்பற்றிப் பேசாமை (2) பெண் வடிவத்தைப் பாராமை (3) இல்லறத்தில் இருந்தபொழுது நுகர்ந்த அநுபவங்களை நினைவு கூராமை, (4) ஊன் உணவினைக் கடிதல் (5) பெண் உறையும் இடங்களைத் தவிர்த்தல் என்பவையாகும். இவ்வைந்தும் வரும்பொழுது ஆண் பிக்குணிகளுக்கு தொடர்பு நீக்கமாய் அமையும்.

அபரிக்கிரக விரதம் மகாவிரதம் ஆகுங்கால் தனக்கேனும் தான் சங்கத்திற்கேனும் எப்பொருளையும் தேவைக்கு அதிகமாய்ச் சேமித்தலும் காத்தலும் கடியப்படும். உண்மைச் சமணத்துறவியர் இவண் நுவலப்பெறும் பண்புகள் படைத்தவராய்த் திகழ்தல் வேண்டும். (1) பஞ்சமகாவிரதங்களைக் கடைப்பிடித்தல், (2) இரவு உண்ணாமையை மேற்கொள்ளல், (3) எவ்வகை உயிருக்கும் இரக்கம் காட்டிப் பேணுதல், (4) புலன்களை அடக்கி ஆளுதல், (5) ஆசைகளை நீத்தல், (6) மன்னிப்பு உணர்ச்சியைப் பயிலுதல், (7) மேலான குறிக்கோள்களைப் பெற்றிருத்தல், (8) அற்பமாயினும் சிறிதாயினும் எவ்வுயிர்க்கும் எவ்வகையிலும் தீங்கு புரியாதிருத்தலில் உறுதியுடனிருத்தல், சிறந்த சமணத்துறவிகளின் இயல்புகளாகும். (9) தன்னிலை மறுப்புடன் திரிகரணத் தூய்மைக்குரிய காயகுப்தி (= உடலினால் தீமை புரியாமை),