பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

123


தால் விளைந்தவை என்பதாகவும் கூறுவர். அசோகர் காலத்துக் கல்வெட்டுகள் பெளத்த சமயம் கடைச்சங்க காலத்திற்கு, முன்பிருந்தே தமிழகத்தில் பரவியிருந்தமையைப் பறைசாத்துகின்றன. பல ஆண்டுகள் உடலை வகுத்தித் தவங்கிடத்து இறுதியாய்ப் போதி மரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் இருந்த பொழுது பூரண ஞான ஒளி பெற்றதாய் வரலாறு.

திரிபிடகம் : புத்தர் தமது கருத்துகளை கொள்கைகளை நூல் வடிவில் எழுதி வைக்கவில்லை. அவர் சீடர் கன்தாம் அவர் போதித்த கருத்துகளைப் பாலி மொழியில் இரு தொகுப்புகளாய்த் தொகுத்து வைத்துள்ளனர். புத்தர் பெருமான் நிர்வாண மோட்சம் அடைந்த சில திங்களுக்குப் பின்னர் மகத நாட்டுத் தலைநகரான இராசகிருகம் என்ற நகருக்கு அருகில், ஒரு மலைக்குகையில். கார்காலத்தைக் கழிப்பதற்காக ஐந்நூது தேரர்கள் - வயது முதிர்ந்த பிட்சுகள் ஒருங்கு கூடினர். இதுவே பிட்சுகள் கூடிய முதல் மாநாடாகும். இம்மாநாட்டிற்குப் புத்தருடைய முக்கிய சீடர்களுள் ஒருவரான மகா காசிபர் என்பார் தலைமை தாங்கினார். உபாலி என்ற மற்றொரு சீடர் புத்தர் பெருமான் அருளிய விநய போதனை களைத் தொகுத்து ஓதினார். இவை பிட்சுகளும் பிட்கனிகளும் ஒழுகவேண்டிய ஒழுக்கங்களைப்பற்றியவை. இன்னொரு முக்கி: சீடராகிய ஆநந்தர், புத்தர் அருளிய தம்ம போதனைகளை ஓதினார்: இவை அறநெறிகள்பற்றியவை. இவை முறையே விதய பிடகம், தம்ம பிடகம் அல்லது அபிதம்ம பிடகம் என்து பெயர் பெற்றன. பிற்காலத்தில் அபிதம்ம பிடகத்திலிருந்து சூத்திர பிடகம் என்ற மூன்றாவது பிடகம் தொகுக்கப்பெத்தது. இந்த மூன்றும் இன்று திரிபிடகம் என்று வழங்கப்படுகின்றன. இவையே பெளத்த மதைகளாகும். பிடகம் என்தால் பாலி மொழியில் கூடை என்பது பொருள். திரிபிடகம் என்றால் மூன்று கூடைகள் என்று பொருள்படும். அஃதாவது மூன்து தொகுப்புகள் என்பது கருத்து. ஒவ்வொரு பிடகத்திலும் பல பிரிவுகள் உள்ளன. திரிபிடகங்கள் தொகுக்கப்பெற்ற பிறகும் அவை இறையனார் களவியல் உரை போலவும், வைணவ வியாக்கியானங்கள் போலவும் எழுதா மறைகளாகவே இருந்து வந்தன; ஆசிரியர் - மாணாக்கர் வழி முறையாகவே நெடுங் காலமாய் ஓதப்பெற்று வந்தன.


47. வடநாட்டில் (பீகார் மாநிலம்) கயை நகரத்திற்கு ஐந்து கல் தொலைவிலுள்ள புத்த கயையிலுள்ள போதி விருட்சம் (அரச மரம்). மேல் அடியேன் என் துணைவியுடன் நேரில் கண்டு வழிபட்டேன்