பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சமயம், தத்துவம்

129


 (1) அண்டமும் பிண்டமும் : ‘அண்டத்தில் போலத்தான் பிண்டத்திலே’ என்பது தம் மக்களிடையே வழக்கிவரும் ஒரு முதுமொழி. இந்தப் பழமொழியின் உண்மை. அது அணு ஆராய்ச்சியில் புலனாவதை அறியலாம். அணுவின் அமைப்பும் அண்டங்களின் அமைப்பும் ஒப்புடையனவாயுள்ளன என்று அறிவியலறிஞர்கள் மெய்ப்பித்துள்ளனர். அறிவியலறிஞர்கள் ஆய்வுகள் மூலம் கண்டவற்றையே நம் நாட்டு ஞானச்செல்வர்கள் உள்ளுணர்வால் அநுபவமாய்க் கண்டுள்ளனர். அறிவியலறிஞர்களின் அணுவியலும் ஞானச்செல்வர்களின் அநுபவ இயலும் ஓரிடத்தில் சந்திப்பதை ஆராய்ந்து பார்ப்போர் நன்கு அறிவர். அணுக்கோயிலின் முன்நிற்கும் அறிவியல் அறிஞர்களும் அண்டக்கோயிலின் முன்நிற்கும் அருளாளர் பெருமக்களும் ஒரே உண்மையைத்தான் காண்கின்றனர் என்பதை நாம் அறியுங்கால் எல்லையற்ற மகிழ்ச்சியடைகின்றோம். இறைவன் படைப்பை எண்ணிஎண்ணி வியக்கின்றோம்.

(2) அண்டங்களின் அமைப்பு : முதலில் அண்டங்களின் அமைப்பை நோக்குவோம். இந்த அகிலத்திலுள்ள அண்டங்கள் யாவும் ஆதவ மண்டலத்தில் அமைந்துள்ளன. ஆதவ மண்டலத்தில் நடுவிலிருக்கும் ஆதவனுக்கு மிக அண்மையிலிருப்பது புதன், தொடர்ந்து சுக்கிரன், பூமி, செல்வாய், குட்டிக் கோள்கள் (Asteriods), வியாழன், சனி, யுரேனஸ் (நிகுதி), நெப்டியூன் (வருணன்), புளுட்டோ (குபேரன்) என்ற வரிசையில் அமைத்துள்ளன. இவை ஒன்றையொன்று வேறுவேறு தளத்தில் வேறு வேறு திசையில் கற்றிக்கொண்டுள்ளன. இப்படியே எண்ணற்ற ஆதவ மண்டலங்கள் விண்வெளியில் அமைந்து உலவிக்கொண்டுள்ளன. இவை தவிர, பல்லாயிரக்கணக்கான நட்சத்திரக் கூட்டங்கள் வானவெளியில் கண் சிமிட்டிக்கொண்டுள்ளன. இவற்றுள் சூரியன், சந்திரன் (துணைக்கோள்), செவ்வாய், புதன், வியாழன் (குரு - பிரகஸ்பதி), வெள்ளி (சுக்கிரன்). சனி, இராகு, கேது இவற்றின் அடிப்படையில் சோதிடக்கலை (Astrology) உருவாகியுள்ளது. அறிவியல் அடிப்படையில் அண்ட கோளங்களிலுள்ள அனைத்தின் அடிப்படையில் வான சாத்திரம் (Astronomy) அமைந்துள்ளது. சோதிடக்கலை சமயத்தில் புகுந்துவிட்டதால் திருக்கோயில்களில் ஒன்பது கோள்கள் ‘நவகிரகங்கள்’ என்ற பெயரில் இடம் பெற்று வழிபாடும் நடைபெற்று வருகின்றது. இந்த அண்டங்களை