பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


அவர்கள். இவர் தம் அருமைத் தந்தையார் நினைவாக இந்த அறக்கட்டளைச் சொற்பொழிவுத் திட்டத்தை நிறுவியவர். பேராசிரியர் டாக்டர் நாயுடு அவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தில் இந்தித் துறையில் முதல் பேராசிரியர் - துறைத் தலைவராய் அமர்ந்து துறையைச் சிறப்புற வளர்த்து, ஒய்வு பெற்றவர்கள்; பல கருத்தரங்குகளை நடத்தியவர்கள்: வெவ்வேறு இடங்களில் பல்வேறு கருத்தரங்குகளிலும் இலக்கிய மாநாடுகளிலும் கலந்துகொண்டு துறைக்குப் பெரும்புகழ் ஈட்டியவர்கள். காரைக்குடியில் அடியேன் அழகப்பர். பயிற்சிக் கல்லூரியில் (1950ஆம் ஆண்டுகளில்) பணிபுரிந்த காலம் முதல் இவருடன் நெருங்கிப் பழகியுள்ளேன். பழகும் போது இன்முகத்துடன் னிமையாய் உரையாடி தண்டர்களை மகிழ்விப்பார்கள்.

நான் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் - துறைத் தலைவராய்ப் பொறுப்பேற்றிருந்த காலத்தில், அனைத்திந்திய கீழ்த்திசை மொழி மாநாடுகளில் தவறாமல் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை (ஆங்கிலத்தில்) வழங்குவதுண்டு. பேராசிரியர் டாக்டர் நாயுடு அவர்களும் தவறாமல் இம்மாநாடுகளில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை வழங்குவதைக் கடமையாய்க் கொண்டவர்கள். 1960-80ஆம் ஆண்டுகளில் நாங்கள் தில்லி, கல்கத்தா, சாந்தினிகேதம், வாரணாசி (உத்திரப்பிரதேசம்), தார்வார் (கர்நாடகம்), குரு சேத்திரம் (ஹரியானா), பூனா (மராட்டியம்), உஜ்ஜயினி (மத்தியப் பிரதேசம்) ஆகிய இடங்களில் நடைபெற்ற இம்மாநாடுகளில் கலந்துகொண்ட நாள்கள் இன்னும் என் உள்ளத்தில் பசுமையாகவே உள்ளன. குருட்சேத்திரத்தில் நடைபெற்ற மாநாட்டில், அடுத்த மாநாட்டுக்குத் திராவிடப் பகுதிக்கு நடைபெறும் தலைவர் தேர்தலில் என்னை வேட்பாளராய் நிற்க வைத்து வெற்றி பெறச்செய்தவர்கள். இந்தி வழங்கும் பகுதியிலிருந்து வரும் அன்பர்களிடம் இவர்தம் செல்வாக்கு நன்கு இருந்தமையால், அவர்தம் வாக்குகளால் வெற்றி பெற முடிந்தது.

இத்தகைய அன்பர் பேராசிரியரின் தந்தையார்தாம் நிமிஷ கவி.கே. சுப்பைய நாயுடு என்பார். இவர்தம் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பையும் உங்கள் முன் வைப்பது பொருத்தமாகும் என நினைக்கின்றேன். இப்பெரியார் திக்கெல்லாம்