பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்



நிலம்நீர் தீகாற்று எனநால் வகையின
மலைமாம் உடம்புஎனத் திரள்வதும் செய்யும்;
வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும்:
அவ்வகை அறிவது உயிர்எனப் படுமே”3.[1]

என ஆசீவகவாதி4[2] தன் சமயத்தை எடுத்துரைப்பதைக் காணலாம். நியாயமதம், வைசேடிகமதம் என்பனவும் இதனையே பேசின. அணுக்கொள்கையை வற்புறுத்தியதன் பயனாய் வைசேடிக மதத் தலைவரான கணாதருக்கு ‘அணு விழுங்கியார்’ என்ற திருநாமமும் வழங்கலாயிற்று. சமணர்கள் நான்கு பூதக் கொள்கையை வற்புறுத்தியது போல, மேலை நாட்டினரான அரிஸ்டாட்டிலும் (Aristotie) இதே கொள்கையை வற்புறுத்தினார். அவர் பேயாய்ப் பிடித்து எல்லோரையும் ஆட்டி வந்தார் எனலாம். அவர் கீறிய கோட்டிற்கு அப்பால் எவரும் தாண்டக்கூடாது. அப்படித் தாண்டினால், தாண்டினவர் தலை வெடித்துப்போகும் என்று அஞ்சினர். அவர் காலத்தில் நிக்கலஸ் (Nicholus) என்பவரும் அணுவாதம் பேசினார். அதைக் கேட்பார் யார்? எவரும் இலர். கோவணம் கட்டாத ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் அல்லவா? அரிஸ்டாட்டில் வழிவழி வந்தவர்களின் பேச்செல்லாம் ஒரே பேச்சுதான். அடுப்பங்கரைவரையில் அரிஸ்டாட்டிலின் கொள்கை உண்மையாய் நிலவுவதைக் காணலாம் என்றனர். பச்சை விறகு எரியும்போது எவற்றைக் காண்கின்றோம். அவர் கூறிய நான்கு பூதங்களையும் காணலாம்.

(i) நெருப்பு சுடர்விட்டு எரிவதைக் காணும்போது புகை

காற்றாய் மேல் எரிவது தெரிகிறது.

(ii) ஆறு கடலில் கலப்பது போலப் புகை காற்றில் போய்க் கலக்கின்றது.

(iii) சிடுசிடு என நீர் ஆவியாய் மாறுவதனைக் கண்டும்

கேட்டும் வருகின்றோம்.

  1. 3. மணிமேகலை - சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை - அடி 110 - 19.
  2. |4. ஆசீவகம் : இச்சமயத்தை நிறுவியவர் மற்கலி என்பார். மகத நாட்டவர் (பீகார் மாநிலம்). மகாவீரரும் புத்தரும் மற்கலி காலத்தவர். ஆயினும் இருவர்க்கும் மூத்தவர் மற்கலியே என்பது பாலிபிடகங்களாலும் சமண சூத்திர நூல்களாலும் அறியப்பெறுகின்றது.