பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

கைக்கடிகாரத்தின் சமன் உருளை :

பெரிய கடிகாரங்களின் ஊசல்தண்டு செய்யும் வேலையைக் கைக்கடிகாரங்களில் சமன் உருளை (சுருள்) செய்கிறது. கைக்கடிகாரத்தில் மயிரிழை வில் (Hair-Spring) உண்டு. இவ்வில்லின் உள்முனை நிலையாகப் பொருத்தப்பட்டிருக்கும் சமன் உருளை மயிரிழை வில், இவற்றின் நில ஈர்ப்பு மையங்கள் ஒரே அச்சில் இருக்கும்.

உருளை விட்டுத்தடுக்கி, நெம்புகோல்விட்டுத் தடுக்கி என இருவகை விட்டுத்தடுக்கிகள் கையாளப்படுகின்றன. உருளை விட்டுத் தடுக்கியில் அடுத்துள்ள இரு பற்களிடையே, முடிவு பெறாத உருளை பொருத்தப்பட்டிருக்கும்.

உருளை ஊசலாடும்போது அதன் C, D என்ற இரு முனைகளாலும், பல் உருளைகள் மாறி மாறிக் கட்டுப்படுத்தப்படும். பல் உருளையிலிருந்து உருளை விசையைப் பெற்று, அதைச் சமன் உருளைக்குக் கொடுக்கும்.

நெம்புகோல் விட்டுத்தடுக்கியே மிகுதியாகக் கையாளப்படுகிறது. A, B என்ற முளைகளையுடைய C, D என்ற நெம்புகோல் உண்டு. இதன் D என்ற முனை சிறு பிளவுடன் இருக்கும். R என்ற உருளையில் P என்ற ஊசி அமைக்கப்பட்டிருக்கும். சமன் சக்கரம் ஊசலாடும்.