பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

னர். அதேபோல், மதியத்தின் தேய்வுநிலை 14 நாள்களைக் கணக்கிட்டு இருட்பக்கம் (கிருஷ்ண் பட்சம்) என்றனர்.

பருதியின் (ஞாயிறு-சூரியன்) தோற்றம் மறைவு ஒருநாள் என்றுணர்ந்தவர், திங்களை (நிலவை)ப் பார்த்து 14 நாள்களையும் அதிற் பாதியை வானமண்டலத்தின் ஏழு கோள்களின் பெயரிட்டு அவற்றுக்குரிய (கிழமை) நாள்களாக பகுத்துப் பெயரிட்டனர்.

வாரம் எனினும் கிழமை எனினும் ஒன்றே வாரம் என்ற தமிழ்ச் சொல்-தமிழின் சேய்மொழியான தெலுங்கில் வழங்குகிறது.

நம் முன்னோர் முதலில் பருதியை (ஞாயிற்றை)க் கொண்டு நாளை அளந்ததால் கிழமையை ஞாயிற்றுக் கிழமையிலிருந்து தொடங்கினர் . ஞாயிற்றிலிருந்தே உலகம் தோன்றியது என்று உலகில் முதன் முதல் உரைத்தவர் தமிழரே. தமிழரோடு கிரேக்கர்கள் கிறித்து பிறப்பதற்கு முன்னரே தொடர்பு கொண்டிருந்ததால் அவர்கள் தமிழர் கால முறையை ஏற்றனர்.

பருதி (சூரிய) நாளிலிருந்தே பொழுது தொடங்கப்பட்டது. காலக்கணக்கும் ஞாயிறு,