பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவியல் ஆய்வகம்-அமைப்பு 99. AMAMAMMS இத்தகைய ஏற்பாடுகளால் செலவு குறையும் ; வேறு ஏற்பாடுகளால் அறையின் புழக்க இடம் குறையும். . - துனேக்கருவிகாேயும் பிற சாதனங்களையும் சுவர்களிலுள்ள அலமாரிகளில் வைத்துக்கொள்ளலாம். இந்த அறையில் 7 அடி உயரமும் 5 அடி அகலமுமுள்ள ஆறு அலமாரிகள் இருக்கும் ; உட்கட்டு 1 அடி ஆழம் இருக்கும். இந்த 14 அடியில் 1 அடி சுவரினுள்ளும் ; அடி வெளியில் நீட்டிக்கொண்டும் இருக்கும். இந்த அலமாரிகள் சாமான்கள் லைப்பதற்குப் போதுமானவை. வேதியியல் ஆராய்ச்சிப் பொருள்களுள்ள போத்தல்களைத் தராசுகள் வைத்துள்ள ஒதுக்கிடங் களுக்கருகில் அமைக்கப்பெற்றிருக்கும் திறந்த சிறிய அலமாரிகளில் வைத்துக்கொள்ளலாம். அறிவிப்புப் பலகைகள் வாயில்களுக்கருகிலோ இரண்டு சாளரங்கட் கிடையேயுள்ள இடத்திலோ இடம்பெறலாம். திறமையுள்ள அறிவியல் ஆசிரியர்கள் இத்தகைய ஆய்வகங்களே வைத்துக் கொண்டு சிறந்த அசுவமேதயாகம் செப்து விடலாம். இதற்குக் கட்டுப்பாடு வேண்டும் : கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தாது உதாசீனமாக இருந்தால் ஒன்றும் நடவாது. கீழ்க் கண்டவற்றைக் கட்டுப்பாட்டு விதிகளாகக் கொள்ளலாம் : கட்டுப்பாட்டு விதிகள் : (1) ஒவ்வொருவருக்கும் உரிய இடத்தை முதலிலேயே வரையறை செய்துவிடுதல் வேண்டும். எழுதும் மேசையிலும் இவ்வரையறை இருத்தல் வேண்டும். காரணமின்றி ஆசிரியர் இசைவு பெருது ஒருவரும் அங்குமிங்கும் நடமாடக் கூடாது. (2) 'ஆசிரியரே மாளுக்கர்களுக்குத் தேவையான துணைக்கருவி முதலியவற்றை மேசைகளில் வைக்கும்படி ஏற்பாடு செய்துவிடலாம். நடைமுறையில் இது முடியாவிடின், மாளுக்கர்கள் அறைக்கு வந்ததும் ஒவ்வொரு மேசையிலும் 1,5,9,13.எண்களுள்ள இடங்களிலுள்ள வர்கள் ஒவ்வொருவரும் நான்கு பேர்களுக்கு வேண்டியவற்றை அலமாரிகளிலிருந்து எடுத்துக்கொண்டு வந்து வைக்கும்படி ஏற்பாடு செய்யலாம். (3) பாடவேளே முடிவதற்கு 5 கிமிடங்கள் இருக்கும்பொழுதே பாடத்தை முடித்துவிட்டு துப்புரவு செய்யவேண்டியவற்றையும் தூய்மையானவற்றையும் பிரிக்கவேண்டும். 2, 6, 10, 14...எண் களுள்ள இடத்திலுள்ளவர்கள் துப்புரவு செய்ய வேண்டியவற்றை வடி நீர்த் தட்டில் கொண்டுசேர்ப்பர். 3, 7,11, 15...எண்களுள்ள இடத்தி லுள்ளவர்கள் தூய்மையானவற்றை அலமாரிகளில் கொண்டு சேர்ப்பர். 4, 8, 12, 16...எண்கள் உள்ள இடத்திலிருப்பவர்கள், ஒவ்வொரு மேசையிலுமுள்ள துணியைக்கொண்டு மேசையைத் துப்புரவாக்குவர். ஆசிரியர் சரியென்று ஒப்புக்கொண்ட பிறகு மாணுக்கர்கள் வரிசையாக வெளியே செல்லுதல்வேண்டும்.