பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1. பள்ளிகளில் அறிவியல் பள்ளிகளின் கல்வி ஏற்பாட்டில் அறிவியல் ஒரு விந்தையான பாடம் என்பதைக் கல்வி அறிஞர்கள் உணர்ந்துள்ளனர். அப் பாடத்தைத் திறமையாகக் கற்பிப்பதற்குத் தேவைப்படும் பல்வேறு பொருள்கள், பல்வேறு சோதனைகள் ஆகியவற்றிலிருந்தே அதன் தனித் தன்மை தெளிவாகின்றது. சாதாரணமாக எளிதில் கிட்டக்கூடிய பென்சில், தாள்கள், கரும்பலகை, பாடநூல்கள், வேறு சில துணைக் கருவிகள் போன்றவற்றைக் கொண்டே பெரும்பாலான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். இவ்ை யாவும் அறிவியல் கற்பித்தலுக்கும் இன்றியமையாதவையே. இவை மட்டிலும் அறிவியல் கற்றலுக்குக் கருவிகளாக அமையின் அறிவியல் கவர்ச்சியற்ற விறுவிறுப்பற்றி மந்தமான பாடமாக அமையும். அப்பாடம் திறமையுடன் கற்கப்பெற வேண்டுமாயின் அஃது அநுபவமாக மாறுதல் வேண்டும். ஒரு சிறுவன் அல்லது சிறுமியின் வாழ்க்கையுடன் அறிவியல் நெருங்கிப் பிணைந் திருப்பதால் அதனேக் கற்பதில் மாளுக்கர்கள் பாடநூல்களைப் படித்தலில் மட்டுமோ, அன்றி, சொற்பொழிவுகளேக் கேட்டலில்" மட்டுமோ கட்டுப்பட்டிருக்க வேண்டியதில்லை. இவ்வுலகில் நாம் எங்குச் சென்ருலும் அறிவியல், சூழ்நிலையின் ஒரு நெருங்கிய பகுதியாகவே அமைந்துள்ளது. உயிர்வாழ் பிராணிகள், இப்பூமி, வானம், காற்று, நீர், வெப்பம், ஒளி, புவியீர்ப்பு ஆற்றல் போன்றவை அனைத்துமே அறிவியல் மெய்ம்மைகள் அடங்கியவையே. எனவே, அறிவியல் கற்றலுக்கு நேரடியான பொருள்களில்லேயே என்ற கவலேயை எந்த ஆசிரியரும் கொள்ள வேண்டியதில்லை. உற்று நோக்கல், சோதனைகளே மேற்கொள்ளல் ஆகியவற்றின் அடிப்படையில்தான், சிறந்த முறையில் அறிவியல் பயிற்றல் அமையும். இவற்றிற்கு ஈடுசெய்யக் கூடிய வேறு யுக்தி முறைகளே இல்லை என்று சொல்லலாம். ஆல்ை, சோதனைகள் செய்வதற்கும் அண்மையிலிருந்து கொண்டு உற்றுநோக்கல்களே மேற்கொள்வதற்கும்" தனிப்பட்ட வசதிகள் வேண்டும். இவ்வுலகில் பெரும்பாலான இடங்