பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/194

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


178 அறிவியல் பயிற்றும் முறை வளர்ச்சியடைகின்றது ; மன வளர்ச்சி உண்டாகின்றது. சிருர்களின் சுறுசுறுப்புத் தன்மைக்கும் கைவேலைகள் ஏற்றனவாகும். உடலியலும் கலவழியும் : நம்முடைய உடலேயும் உடல் நலத்தை யும்பற்றிய எத்தனையோ அறிவியல் மெய்ம்மைகள் உள்ளன. காற்று, குடிநீர் முதலியவற்றைத் தூய்மைப்படுத்தும் முறைகள், உணவு முறைகள், உணவு செரித்தல், வெளிச்சம், காற்ருேட்ட வசதிகள், காது கண் முதலியவைபற்றிய செய்திகள் யாவும் அறிவியல் பாடத்தில் கற்பிக்கப்பெறுகின்றன. எனவே, அறிவியலே உடலியலுடனும் கலவழியுடனும் இணைத்துக் க ற் பி த் தால், மாளுக்கர்கட்கு உண்மை அறிவு ஏற்படும் ; கற்பதன் நோக்கமும் தெளிவாகப் புலகுைம். - - - இசை இசையையும் அறிவியல் பாடத்துடன் இணைத்துக் கற்பிக்கலாம். வீணே, ஃபிடில், மோர்சிங்க், கஞ்சிரா முதலிய கருவிகள் எவ்வாறு உற்பத்திசெய்யப்படுகின்றன என்பதை அறிதலும், ஒலி நுணுக்கங்களைப்பற்றி அறிதலும் அறிவியல் பகுதியைச் சேர்ந்தவை. கிராம.போன், வானொலிப் பெட்டி முதலியவை செயற்படுதலே அறிதலேயும் அறிவியலில் சேர்க்கலாம். சமயம் : உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாளுக்கர்கள் அறிவியலைச் சமயத்துடன் இணைத்து உணர்வது சிரமம் ; அவர்கள் அறிவு நிலையும் கருத்துணரும் திறனும் அந்த அளவுக்குப் பக்குவப் பட்டிராது. இவ்வுலக நிகழ்ச்சிகளேயும், உலகப் பொருள்களின் தோற்றம், வளர்ச்சி, ஒடுக்கம் முதலிய செயல்களேயும் எண்ணிப் பார்ப்பவர்கள், சாட்டி கிற்கும் அண்டமெலாம் சாட்டையிலாப் பம்பரம்போல் ஆட்டுவிக்கும்” ஆண்டவன் திறத்தினை வியக்கமுடியும். சர். ஐசாக் கியூட்டன் போன்ற அறிஞர்கள் இவ்வகிலம் ஆண்டவன் திருவுளத்திலமைந்த திட்டத்தால் இயங்குகின்றது என்று கணித வாப்பாடுகளாக உணர்த்துகின்றனர். டாக்டர் ஐன்ஸ்டைன் என்ற அறிவியல் மேதை அதைத் தெளிவாக விளக்கியுள்ளார். அறிவியல் அறிஞர்கள் கூறிய கருத்தினேயே மெய்யறிவு பெற்ற கவிஞர் பரஞ்சோதியார் இவ்வாறு கூறுகின்ருர் :

  • அண்டங்க ளெல்லாம் அணுவாக அணுக்கள் எல்லாம்

அண்டங்க ளாகப் பெரிதாய்ச் சிறிதாயி ஞனும் அண்டங்களுள்ளும் புறம்புங் கரியாயி னனும் அண்டங்கள் ஈன்ருள் துணைஎன்பர் அறிந்த கல்லோர்.” இதில் அறிவியல், அநுபவ இயலாக முகிழ்த்துள்ளமையைக் கண்டு மகிழ்க. 1. குநருலக் குறவஞ்சிட்செய். 107. 2. திருவிளையாடற் புராணம்-பாயிரம் செய் : 8.