பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4. பாடத் திட்டம்: பொருள் அமைப்பு அறிவியல் பாடத்திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற பொருள்களே நல்ல முறையில் அமைத்தல் வேண்டும். பாடத்திட்டம் வகுப்போர் பல முறைகளே மேற்கொள்ளுகின்றனர். அறிவியல் ஆசிரியர் ஆசிரியப் பணியை மேற்கொள்ளுவதற்கு முன்னர் அவற்றைத் தெளிவாக அறிதல் வேண்டும். எனவே, அவைபற்றி ஈண்டுச் சிறிது ஆராய்வோம். 1. வரலாற்று ஒழுங்கு : தொடக்கத்திலிருந்து ஒரு பாடம் எப் படிகளில் வளர்ச்சியுற்றதோ அப்படிகளிலேயே பாடத்திட்டத்தையும் அமைத்துக் கற்பித்தால் மாளுக்கர்கட்குக் கற்பதில் கவர்ச்சி பிறக்கும் என்று சிலர் கருதுகின்றனர். எனவே, பாடத்திட்டப் பொருள்களே அங்ங்ணமே அமைத்துப் பாடத்திட்டத்தையும் உருவாக்குகின்றனர். முன் குமரப்பருவ மாளுக்கர்கள் இந்த அமைப்பை நன்கு சுவைத்துப் பயில முடியாது : வரலாற்றுத் தொடர்பில் பொருள்களே உணர்ந்து கற்கும் அறிவுகிலே அவர்கட்கு ஏற்படாது. நுண்கிருமிகள், அறுவை சிகிச்சைக் கருவிகளேத் துய்மையாக் குதல், நச்சு நீக்கிகளின் பயன்கள் ஆகியவைபற்றி வரும் பாடங்களே ஃபாஸ்ட்டர், லிஸ்டர் ஆகியோரின் வரலாற்றுடன் அமைக்கலாம். ஊசலிபற்றிய செய்திகளே அறிவதற்குமுன் நெம்புகோலின் விதிகளே அறிந்துகொள்ளல் வேண்டும். இயற்கையை உற்று கோக்குவதில்தான் மனிதனின் கவனம் முதலில் சென்றது. எனவே, வேதியியலேப் படிப்பதற்கு முன்னர் இயற்கைப் பாடத்தைக் கற்றல் வேண்டும். கில இயலுக்கு முன்னர் வானநூல் (Astronomy) நல்ல முறையில் வளர்ச்சி யுற்றதால் அதனே முதலில் கற்க வேண்டும். அறிவியல் வரலாற்றை உற்று நோக்கினுல் அங்கக வேதியியலேத் தொடங்குவதற்குமுன் அனங்கக வேதியியலேக் கற்க வேண்டும் என்பது தெரியவரும். 2. காரண காரிய ஒழுங்கு : கற்பிக்க வேண்டிய பொருள்களேக் காரண காரியத் தொடர்புடன் அமைத்துப் பாடத்திட்டத்தை உருவாக் கலாம். எப்படியமைத்தாலும் சில சமயங்களில் சில செய்திகளே