பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அறிவியல் பயிற்றும் முறை ഹ**ു.----------- مہہمیم~ கற்பிக்கப்பெறுதல் வேண்டும். முதலாண்டில் ஆசிரியர் எல்லாத் துறைகளிலுமுள்ள சில செய்திகளேத் தருவார். இரண்டாம் ஆண்டில் அவை சற்று விரிவாகவும் மூன்ரும் ஆண்டில் இன்னும் சற்று விரிவாகவும் இவ்வாறு தொடர்ந்து கற்பிக்கப்பெறும். இவ்வாறு கற்பிப்பதால் ஒரே பொருள்பற்றிய அதிக விவரங்களே மாணுக்கர்கள் அறிந்துகொள்ளுகின்றனர். அ ப் பொரு ள் க ள் ப ற் றி ய அறிவும் அவர்களிடம் கன்கு வலியுறுகின்றது. எடுத்துக்காட்டாக, முதல் வகுப்பில் ஒரு செடியின் இலே, பூ, காய், தண்டு, வேர் ஆகியவற்றைப் பொதுவாகக் கற்பிக்கலாம். இரண்டாவது வகுப்பில், இந்த உறுப்புகள் செடிக்குச் செடி எவ்வாறு மாறுபடுகின்றன என்பதைக் கவனிக்கச் செய்யலாம். மூன்ரும் வகுப்பில், பலவித இலகள்-கேர் நரம்பு, வலக்கண் நரம்பு, வடிவம், ஒரம் வேர் வகைகள்-ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர் போன்ற செய்திகளே விரிவாகக் கற்பிக்கலாம். மூன்ரும் வகுப்பில், பல வகைப் பூக்களேச் சோதித்து அவை நிறம், மணம், உருவம் ஆகியவற்றில் மாறுபடுவதைக் காட்டி, கான்காம் வகுப்பில் ஊமத்தை, பூவரசு போன்ற பூக்களின் பாகங்களையும் பிஞ்சு உண்டாவதையும் கற்பிக்கலாம். பூக்களின் பாகங்கள், அவற்றின் பயன்கள், மகரந்தக் கலப்பு உண்டாகும் விதம் ஆகியவற்றை ஐந்தாம் வகுப்பில் கற்பிக்கலாம். தொடக்ககிலேப் பள்ளிக்குரிய பாடத் திட்டத்தைக் கவனித்தால் இஃது ஒரளவு நன்கு தெளிவாகும். நடு நிலை, உயர்நிலைப் பள்ளிகளின் அறிவியல் பாடத்திட்டத்திலும் இவ்வொழுங்கு ஒரோ வழி கையாளப்பட்டுள்ளது. உணவு, சுவாசித்தல், அசைதல், கல்வாழ்வு, வீடு கட்டுதல், வாழும் சூழ்கிலேயை ஆராய்தல், இயற்கையாற்றலேப் பொது நலனுக்குப் பயன்படுத்துதல், இயற்கைப் பொருள்களே மனித நலனுக்குப் பயன்படுத்துதல் என்ற தலைப்புகளில் முதற்படிவம், இரண்டாம் படிவம், மூன்ரும் படிவம் ஆகிய வகுப்புகளில் செய்திகள் தொடர்ந்து வளர்ச்சி பெற்று விளக்கம் அடையுமாறு அமைந்திருப்பதைக் காணலாம். அன்பர்கள் அப்பாடத்திட்டங்களைக் கூர்ந்து நோக்கி இவ்வொழுங்கைக் கண்டு கொள்வார்களாக. மாளுக்கர்களின் அறிவு வளர்ச்சியையும் பட்டறிவு வளர்ச்சியையும் ஒட்டி, ஒரே பொருளேக் குறித்து செய்திகள் படிப்படியாக மிகுதியாகத் தரப்பெறுவதால் அவர்கள் ஆழ்ந்த அறிவையும் அகன்ற அறிவையும் பெறுவதற்கு முடிகின்றது. பொதுமைய ஒழுங்கில் பாடத்திட்டத்தை அமைப்பதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. இம் முறையில் எல்லாப் பாடங்களும் ஒரே சமயத்தில் தொடங்கப்பெற்று அவை படிப்படியாக வளர்ச்சி பெற இடம் உள்ளது. வேறு எந்த முறையிலும் இத்தகைய வசதிகளோ வாய்ப்புகளோ இல்லே : ஒரு பொருளே நன்கு கற்ற பிறகுதான் அடுத்த பொருளுக்குப் போக முடிகின்றது. எல்லாக் கூறுகளையும் ஒரே