பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாடத் திட்டம் பொருள் அமைப்பு 35 குரிய ஒரு பாடத்திட்டம் வகுக்கப்பெற்துக் கற்பிக்கப்பெறும். தம்மாலான திட்டம் என்று மாணுக்கர்கள் அறிவதால், அத்திட்டம் மிக வெற்றியுடன் நடைமுறையில் கையாளப்படுகின்றது. மாளுக்கர்களும் விருப்பத்துடனும் உற்சாகத்துடனும் அப்பகுதிகளைக் கற்கின்றனர். சில அமெரிக்கப் பள்ளிகளில் ஆசிரியர் பழைய முறையில் ஒரு. விதியை கிலேகாட்டுவதற்குப் பதிலாக அல்லது மேற்கூறியவாறு ஒரு தலைப்பை அறிவித்தற்குப் பதிலாக ஒரு பொறி அமைப்பைக் (எ-டு : ஒரு மின்விசை மணி) கொடுத்து அதிலுள்ள அனைத்தையும் கண்டறியும்படி கூறுவார். மானுக்கர்கள் ஆசிரியர் குறிப்பிடும் சில நூல்களேத் துனேயாகக்கொண்டு அவற்றைக் கண்டறிவர் ; பிறரிடம் கேட்டும் அவற்றைத் தெரிந்துகொள்ளலாம். ஒரு வாரத்திற்குப் பிறகு அதைப்பற்றிய ஆராய்ச்சி வகுப்பில் நடைபெறுழ். இம்மாதிரி பல பொருள்கள் தொகுக்கப்பெறும். அவை வகைப்படுத்தப்பெற்று தொடர்புடன் இயையுமாறு பல பாடங்களாக அமைக்கப்பெற்றுக் கற்பிக்கப்பெறும். இம்மாதிரி திட்டம் வகுப்பதில் மாளுக்கர்கள் மிக உற்சாகத்துடனிருப்பதுடன் கற்பதிலும் நிறைந்த ஆர்வங் காட்டுவர். 6. அலகுத் திட்டம் : அலகுத் திட்டம் என்பது தலைப்பு ஒழுங்கின் வளர்ச்சியாகும். தலைப்பு ஒழுங்கில் அமையும் பாடத் தலைப்புகள் இன்னும் வரையறைப்படுத்தி இத்திட்டத்தில் ஒழுங்கு படுத்தப்பெறுகின்றன. ஒவ்வோர் அலகும் தன்னுேக்கச் செயல் திட்டங்களுடன் எளிதில் இணக்கவல்லதாக இருப்பதால் இத் திட்டத்தில் பல நன்மைகள் இருப்பதாக முறை வல்லார் கருது கின்றனர். எடுத்துக்காட்டுகளாக ஒரு சில அலகுகளே ஈண்டுத் தருவோம். மனிதன் எவ்வாறு உணவைத் தயாரிக்கின்ருன் : மனிதன் எவ்வாறு வீடு குடியிருப்பு வசதிகளைச் செய்து கொள்ளுகின்ருன் ? மனிதன் எவ்வாறு தொற்றுநோய்களிலிருந்து காத்துக் கொள்ளுகின்ருன் ? . மின்னுற்றல் எவ்வாறு பெறப்பட்டுப் பயன்படுத்தப் பெறுகின்றது ? போக்குவரவு சாதனங்களுக்கு எவ்வாறு மின்னற்றல் பயன் படுத்தப்பெறுகின்றது ? இத்தகைய ஒவ்வோர் அலகும் மிக விரிந்த கிலேயில் உள்ளது : ஒவ்வொன்றிலும் பல செய்திகளே அடக்கலாம். வகுப்பில் கலந்தாய்தல் மூலம் இந்த அலகுகளைப் பல்வேறு சிறிய அலகுகளாகக் கூறுபடுத்திக் கொள்ளலாம் ; கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக மனிதன் எரி பொருள்களிலிருந்து கிடைக்கும் ஆற்றலே எவ்வாறு பெற்று அதைத்