பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36 அறிவியல் பயிற்றும் முறை معتمام مسیه தனது கலன்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளுகின்ருன் ?’ என்ற அலகு இவ்வாறு சிறிய அலகுகளாகக் கூறுபடும் : பொருள்கள் எரியும்பொழுது என்ன நேரிடுகின்றது ? காம் முக்கிய எரி பொருள்களே எவ்வாறு அடைகின்ருேம் ? எரிதலால் வெளியாக்கப்பெறும் வெப்ப ஆற்றல் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்பெற்றுப் பயனுக்கப்பெறுகின்றது : நமக்குக் கிடைக்கும் எரி பொருள்களே எவ்வாறு பாதுகாக் கின்ருேம் ? - - அழிக்கும் நெருப்புகள் எவ்வாறு கட்டுப்படுத்தப் பெறு கின்றன ? - - இந்தச் சிறிய அலகுகள் ஒவ்வொன்றும் தனித் தனியாக விரிவாக ஆராயப்பெறும். இதல்ை ஏற்படும் நன்மைகள் அங்கையின் கெல்லியாம். பெரும்பாலும் கீழ் வகுப்புகளில் இத்திட்டத்தை மிக நன்ருகக் கையாளலாம். மாளுக்கர்களின் மனவளர்ச்சிக் கேற்றவாறு அமைத்தல் : மாளுக்கர்களே விளயாட்டு மைதானத்தில் உற்று நோக்குவோர் சில மெய்ம்மைகளே அறிதல் கூடும். அவர்கள் ஒரே விளையாட்டைச் சில நாட்கள் தொடர்ந்து விளையாடுவர் ; பிறகு வேருெரு விளேயாட்டை மேற்கொண்டு விளையாடுவர். இதிலிருந்து குழந்தைகளின் கவனம் நீண்ட நாட்கள் ஒரே பொருளில் நீடித்திராது என்பது பெறப்படும். எனவே, பாடத்திட்டத்தை அமைக்கும்பொழுது பாடப்பொருள்களைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து அமைத்தல் சாலப் பயன்தரும் என்பது புலனுகின்றது. அப்படிச் செய்தால்தான் குழந்தைகளின் கவர்ச்சிகளைச் சிறிது காலம் தொடர்ந்து கிலேநிறுத்தலாம். எனவே, பாடத்திட்டத்தை அமைக்கும்பொழுது மாணுக்கர்கள் மனவளர்ச் சியையும் கருதுதல் வேண்டும். சிறுவர்களிடமும் சற்று வளர்ந்த கிலேயிலுள்ளவர்களிட மும் காணப்பெறும் கவர்ச்சிகளில் பல படிகள் உள. வொயிட் ஹெட் என்ற அறிஞர் அவற்றைக் கற்பனை கிலே, வரையறை கிலே, விதிகாணல் கிலே என்று பெயரிட்டு வழங்குவர். சர், பெர்சி கண் என்பார் வியத்தல் கிலே, பயன்படுத்தும் கில, காரண காரிய நிலை என்ற படிகளைக் குறிப்பிடுகின்ருர். ஒரு பொருளப்பற்றி வியப்பு தோன்றும்பொழுதுதான் கவர்ச்சி பிறக்கின்றது. பின்னர் அப் புதிய பொருளின் பயனக் குறித்து ஆராய்ச்சி தொடங்கும். அதன் பிறகு அதனைப்பற்றிய விவரங்களேத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்படும். இன்னும் சிறிது காலத்திற்குப் பிறகு புதிய அறிவைப் பழைய அறிவுடன் இணேத்தலும், சிறப்புப் பகுதியிலிருந்து பொதுக்கருத்தைப் பார்க்கும் ஆற்றல் கைவரப் பெறுதலும், காரணகாரியத் தொடர்புகொள்ள முயற்சி எடுத்தலும் மாளுக்கனிடம் தோன்றும். ஒரே வயதுள்ள பலரிடம் இக்கவர்ச்சிகள்