பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. அறிவியல் முறை பயிற்றும் முறைகளின் நோக்கம் : அறிவியல் பயிற்றும் நோக்கங்களே மனத்திற்கொண்டு எவற்றைக் கற்பித்தல் வேண்டும் ? ஏன் கற்பித்தல் வேண்டும் என்று சிந்திக்கும் ஆசிரியர் கற்பித்தல மேற் கொள்ளுகின்ஞ்ர். கற்பிக்கும் நோக்கங்கள் யாவற்றையும் நிறைவு பெறச் செய்தல் அவரது கடமையாகும். ஒவ்வொரு நோக்கமும் ஒவ்வொரு முறையால்தான் நிறைவேறும். பணியை மேற்கொண்ட ஒரு சில மாதங்களில் பின்னர்க் குறிப்பிடப்பெறும் விரிவுரை முறை, செய்துகாட்டல் முறை, சோதனேச்சாலே முறை முதலிய முறைகளே மேற்கொள்ளல்கூடும் அறிவியல் கழகங்களே கிறுவுதல் கூடும்; கல்விச் செலவுகளே மேற்கொள்ளல்கூடும் ; பொருட்காட்சிச் சாலைகளே ஏற்படுத்தக் கூடும். இன்னும் இன்னுேரன்ன பிற உபாயங்களே யெல்லாம் மேற்கொண்டு, கற்பித்தலில் தொடர்ந்து பணியாற்றலாம். எந்த முறைகளே மேற்கொண்டலும் அவை யாவும் அறிவியலேப் புரிந்து கொள்ளுவதில்தான் கொண்டுசெலுத்தும் இறுதி நோக்கமும் அது வாகத்தானே இருத்தல்வேண்டும்? ஆங்கிலத்தில் சயன்ஸ் என்று குறிப் பிடப்பெறும் அறிவியல்' என்பது யாது ? அறிவியல் - விளக்கம் : சயன்ஸ் என்ற சொல் அறிவு எனப் பொருள்படும் கிரேக்கச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். இன்று அச் சொல் இந்த அகிலத்தைப்பற்றியும் அதிலுள்ள பொருள்களேப் பற்றியும் அறியும் அறிவு என்ற பொருளில் வழங்கப்படுகின்றது. ஒன்றிலிருந்து பிறிதொன்றைப் பிரித்தறியும்பொருட்டு விலங்கியல், வானநூல், வேதியியல் என்பன போன்று, அறிவியல் பல வகையாகப் பிரித்து வழங்கப்பெறுகின்றது. ஒவ்வொரு துறையும் பொருளில் வேறுபடினும், முறையில் எல்லாம் ஒன்றேதான் : பல நூற்ருண்டு களாக இந்த அகிலத்தைப்பற்றி அறிந்துகொள்ளும் முறையையே அ. து உணர்த்துகின்றது : தனிப்பட்ட முறையில் அறிந்துகொள்ளும் முறையே அறிவியல்’ என்று கூறினாலும் பொருந்தும். எனவே, உண்மையான அறிவைத் திரட்டும் முறையே அறிவியல்' என்று வழங்கப்படுகின்றது. . 1. Science is a method of obtaining true knowledge.