பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாடத் திட்டம் : பொருள் அமைப்பு - 33 مسموم . میہ۔ --۔ --۶ہ*مہ-۔ ٭-مہ-سے مممممممـم" -~ ----س--- ب• - தனிப்பட்டோரின் உரிமைகளேயும் சமூகஒழுங்கையும் ஒட்டிய தேவை களே நிறைவு செய்வதென்பது சிறந்த அரசியல் வல்லுநரால் நிறை வேற்றக் கூடியதொன்று. அனேத்தையும் ஒர் அரசியல் வல்லுநர்தான் மனநிறைவுகொள்ளும் முறையில் இணேத்துக்காட்டல் முடியும். அது போலவே, பல்வேறு சமூகப் பிரிவுகளிலிருந்தும் சூழ்கிலேகளிலிருந்தும் வரும் குழந்தைகளின் மனகிலேக்கேற்றவாறும், பின்னர் அவர்கள் அமைத்துக்கொள்ளும் வாழ்க்கையை யொட்டியும் அறிவியல் பாடத் திட்டம் வகுப்பதென்பது சிறந்த கல்வி அறிஞர்களால் செய்யப்படக் கூடியது. சிறந்த கல்வியும், கிறைந்த பட்டறிவும், ஆழ்ந்து சிந்திக்கும் ஆற்றலும் பெற்றுள்ள அறிவியல் ஆசிரியர்கள்தாம் சிறந்ததொரு பாடத் திட்டத்தை நன்முறையில் உருவாக்கல் முடியும். அங்ஙனம் உருவாக்கப் பெற்ற எத்திட்டத்தையும் முடிந்த முடிபாகக் கொள்ளல் முடியாது. எல்லாம் அறிந்தவர்கள் எக்காலத்திலும் இருந்ததில்லை. கேம் குறைவு பட்ட மதியை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஒரு பாடத் திட்டம் எப்பொழுது யாரால் உருவாக்கப்பெற்ருலும் அதில் சில இடைவெளிகள்-குறைகள்-இருக்கத்தான் செய்யும். அவற்றை ஆசிரியர்கள் பரிசீலனை செய்து உணர்தல் வேண்டும். இவ்வாறு உருவான பாடத்திட்டம் நடைமுறையில் மேற் கொள்ளப்பெறுங்கால், கற்பிக்கும் ஆசிரியர்களால் அது மிகவும் பாதிக்கப்பெறும். பாடத்திட்டம் வெற்றிகரமாகப் பலனளிப்பதெல்லாம் கற்பிக்கும் ஆசிரியர்களைப் பொறுத்தது. அவர்கள் கற்பிப்பதில் மேற்கொள்ளும் உற்சாகத்திற்கேற்றவாறு பலனின் தரமும் அமையும். ஆசிரியர்களால்தாம் மானுக்கர்கள் மனத்தில் என்றும் கிலேக்கக்கூடிய பதிவுகளே உண்டாக்க இயலும்.