பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


53 அறிவியல் பயிற்றும் முறை சிரமங்களால் மாணுக்கரின் கவனம் சிதறப்பெருது கற்றலில் அதனே ஆழ்ந்து செலுத்துவதற்குப் பேருதவியாக இருக்கும். அறிவியல் பாடம் பயிற்றுவதற்கு இம்முறையைப் போல் பிறி தொரு சிறந்த முறை இல்லே என்றே துணிந்து கூறலாம். நல்லாசிரி பருக்கும் இம்முறை மிகவும் சிரமமானது : மிகுந்த திறமையுடன் இதனேக் கையாண்டால்தான் வெற்றி காண முடியும். மிகத் திறனுடன் இம்முறையை மேற்கொண்டு கற்பித்தால், காலச் சிக்கனம் உண்டாகும் ; குறைந்த காலத்தில் அதிகப் பகுதியைப் பயிற்றலாம்: மாளுக்கர்களும் உற்சாகத்துடன் கற்பர். கண்ணுல் காண்பதற்கு வாய்ப்புகள் இருப்பதால் அறிவுக்கு முறையீடு செய்து கற்றலில் தெளிவு பிறக்கும். இயற்கைப் பாடங்களைக் கற்றலில் இம்முறை கவர்ச்சியளிக்கவும், விடுப்பூக்கத்தைத் தூண்டவும் வாய்ப்பளிக் கின்றது : 'கற்றலின் இன்றியமையாமையை விளக்குவதுடன் சிந்தனையைத் தூண்டவும் துணை செய்கின்றது. மாணுக்கரின் அறிவுக்கும் கைத்திறனுக்கும் அப்பாற்பட்ட சோதனைகளேக் காணவும் இம்முறை நல்ல வாய்ப்பின நல்குகின்றது. முறைபற்றிய குறிப்புகள் : செய்து காட்டல் முறை திறனுடன் அமையவேண்டுமானல் ஒரு சில பொருள்களே மனத்தில் இருத்த வேண்டும். இளம் ஆசிரியர்களுக்கும் பயிற்சிபெறும் ஆசிரியர்களுக்கும் பயன்படும்பொருட்டு அவை கீழே தரப்பெறுகின்றன: (1) ஆசிரியர் சோதனை செய்து காட்டுவதை வகுப்பிலுள்ளவர்கள் அனைவரும் கன்ருகப் பார்க்கும் வசதிகள் இருக்கவேண்டும். பள்ளிகளி லுள்ள ஆய்வக நிலைக்கேற்றவாறு இவ்வசதிகள் அளிப்பது மாறும். (2) சோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பெறும் துணைக்கருவிகள் கூடியவரை பெரியனவாக இருத்தல் நன்று. அப்படி இருந்தால்தான் அனைவரும் இருந்த இடத்திலிருந்துகொண்டே சோதனையின் ஒவ்வொரு படியையும் நன்கு காண இயலும். (3) சோதனே அமைக்கப்பெறும் இடத்தில் நல்ல ஒளி இருத்தல் வேண்டும். இயற்கை ஒளி போதுமானதாக இல்லாத இடங்களில் செயற்கை முறைகளில் வசதிகள் செய்துகொள்ளவேண்டும். (4) சோதனை செய்து காட்டும் வகுப்பறை (அல்லது ஆய்வக அறை)யிலுள்ள கரும்பலகை ஆசிரியர் பக்கத்திலுள்ள சுவர் முழுவதும் அமைந்திருத்தல் வேண்டும். அப்படியிருந்தால் அதன் இடப்பகுதி யைப் பாடச்சுருக்கம் வரையவும், நடுப்பகுதியைச் சோதனையின் விவரங்களே எழுதவும், வலப்பகுதியைச் சோதனையில் காணும் எடை கள், வெப்ப நிலைகள் முதலிய எடுகோள்களேக் குறித்துக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே சுவரில் படங்கள், கோட்டுப் படங்கள் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கு வேண்டிய இடமும் இருத்தல் மிகவும் இன்றியமையாதது.