பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


曹2 அறிவியல் பயிற்றும் முறை கவர்ச்சியை எழுப்பி, அதைத் தொடர்ந்து அவர்களிடம் கிலே கிறுத்துவதற்குச் சிறந்த வழியாக அமைகின்றது. பொருள்களைத் தாமாகவே உற்று நோக்கவும் மாணுக்கர்களிடம் ஒருவித விழிப்பை உண்டாக்கிப் புதியவற்றைக் கற்பதில் ஆர்வத்தை எழுப்பவும் துணே செய்கின்றது. ஆய்வகத்திற்கு வேண்டிய பயிற்சியை கல்குவதுடன், அங்குப் பல்வேறு பொருள்களேயும் துனேக்கருவிகளையும், கையாளும் திறன்களே எய்த வழியாக அமைகின்றது. ஒரு பகுதியைக் கற்பதைவிட அதைக் கற்கும் முறையில் சரியான மனப்பான்மையை உண்டாக்குகின்றது ; அதனுல் பெறும் அறிவியல் மனப்பான்மை எதிர்காலத்தில் பெருந் துணையாக இருக்கும். சோதனைகளால் கானும் முடிவுகளின் தன்மையையும் தசத்தையும் மாளுக்கர்கள் கன்கு உணர்கின்றனர். ہمعمہ حی குறைகள் : இம்முறையில் சில குறைகளும் காட்டப்பெறுகின்றன. இம்முறை கற்கும் பாணியினமட்டிலும் அதிகமாக வற்புறுத்துவதால் அஃது அறிவியல் அறிவைப் பரப்புவதிலும், புரிந்துகொள்ளும் மனப் பான்மையை உண்டாக்குவதிலும் கவனம் செலுத்தவில்லை என்று கூறப் படுகின்றது. அதிக உதவி அளிக்கப்பெருததால் மாணுக்கர்களிடம் தோன்றும் கவர்ச்சி விரைவில் தேய்ந்து போகக் கூடும். அறிவியல் அறிஞர்கள் நீண்ட நாட்கள் உழைத்துக் கண்டறிந்த மெய்ம்மைகளே யெல்லாம் ஒன்றுமறியாச் சிறுவர்கள் பள்ளி நேரங்களில் சோதனை களால் கண்டறிய வேண்டும் என்று எதிர்பார்ப்பது குருவித் தலையில் பனங்காயை வைத்துக் கட்டுவது போலாகும். இதனுல் காலச் செலவும், பயில்வதில் வாய்ப்புக் குறைவும் உண்டாகின்றன. எல்லாக் குழந்தைகளையுமே இளம் பாஸ்டர் என்ருே இளம் நியூட்டன் என்ருே எண்ணி இம்முறையில் இறங்குவது தவறு: உளவியல் மெய்ம்மைகளுக் கும் சிறிதும் பொருந்தாது. தேவையான அளவு முன்னறிவு இன்றி அறிவியல் விதிகளையும் கொள்கைகளையும் கண்டறிய முனைவது அறிவுக்குகந்த செயல் அன்று எனவே, இதைப் பள்ளியில் மேற் கொள்வது நடைமுறைக்கு ஏற்றதும் அன்று. மானக்கர்களுக்குப் பாட நோக்கம் முன்னரே அறிவிக்கப்படாததால் அவர்கள் குருடன் தடவிச் செல்வது போல் தடவிச் சென்று காலத்தைக் கொன்னே கழிப்பதால், இம்முறை மிகவும் மெள்ளச் செல்லுகின்றது. ஆசிரியர் பத்து நிமிடங்களில் தெரிவிக்கக்கூடிய செய்திகளே இம்முறையால் அறிவதற்குப் பத்து மணி நேரமும் அதற்கு மேலும் ஆகலாம். அறிவியல் துறையில் கண்டறிந்த மெய்ம்மைகள் யாவும் தனிப்பட்ட ஒருவரது முயற்சியால் அறிந்தவை அல்ல பல்வேறு அறிஞர்கள் பாடு பட்டு அறிந்தவையாகும் அவை. மலேரியா கோயைத் தீர்க்கும் வழி களில் அதிகமாகக் கண்டறிந்தது யார் என்பதுபற்றி ரோகுல்டு ராஸ், கிரேலி (Grassi) என்ற அறிஞர்களிடையே கிகழ்ந்த பூசல் இதனை