பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பயிற்றும் முறைகள்-2 γή ஊரில் ஹெலென் பார்க் ஹர்ஸ்ட் என்னும் அம்மையார் இம்முறையை முதன் முதலாக மேற்கொண்டார். இதை நாம் ஒரு முறை என்று வழங்கினாலும் முறையைத் தோற்றுவித்த அம்மையார் இதைக் கல்வி பற்றிய ஒரு சீர்திருத்தமே என்றும், கற்றல், கற்பித்தல் என்ற இரண்டு செயல்களுக்கும் இ.து ஒர் உறவை உண்டாக்குகின்றது என்றும் கூறுகின்ருர். கல்வி என்பது முக்கூட்டுச் செயல் , மாளுக்கன், ஆசிரியர், பாடம் என்ற மூன்று துருவங்கள் அதில் உள. அந்த மூன்று துருவங்களிலும் இம்முறை முன்னேற்றமான பாதையைக் காட்டுகின்றது. மாளுக்கன் : சாதாரணமாகப் பள்ளிகளில் குறை மதியினர், நடு கிலே மதியினர், நிறை மதியினர் ஆகிய அனேவரும் ஒரே வகுப்பில் ஒரே மாதிரியாகக் கற்பிக்கப்பெற்று வருகின்றனர். உளவியலர் மாளுக்கர் களின் நுண்ணறிவு ஈவை யொட்டி மாணுக்கர்களே இனப்படுத்தியிருப்ப தெல்லாம் நடைமுறையில் பயன்படுவதில்லே டால்ட்டன் திட்டத்தில் குழுவாகக் கற்பிக்கும் கிலே இல்லை. மாளுக்கர்கள் தனி கிலேயில் கல்வி பயிற்றப்படுகின்றனர். ஆசிரியர் : டால்ட்டன் திட்டப்படி ஆசிரியர், குலனருள் தெய்வம் கொள்கை மேன்மை கலபயில் தெளிவு கட்டுரை வன்மை நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் உலகிய லறிவோ டுயர்குணம் இணையவும்' அமைந்தவராக இருத்தல் வேண்டும். பொதுக் கல்வித் துறையிலும் தன் தொழிற்றுறையிலும் கற்றுத் துறை போய வித்தகராயிருத்தல் வேண்டும். தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்றபடி வேறு வழியில்லாதவர்கள், பிற துறைகளில் ஏமாற்றமடைந்து அதனல் ஆசிரியத் தொழிலே மேற்கொண்டவர்கள் என்பவர்களுக்கெல்லாம் இங்கு இடம் இல்லை. குழந்தைகளிடம் பரிவு, தன் தொழிலில் நம்பிக்கை உடையவர்களே இங்குப் பணியாற்றத் தகுதியுடைய வர்களாவர். பாடம் : இதுகாறும் கற்று வந்தது போல் கல்வி அனைத்திற்கும் பயன்படும் என்று மொட்டை நோக்கத்துடன் கற்கும் கிலே இங்கு இல்லை. கல்வி வாழ்க்கைக்காகவே என்ற நோக்கத்துடன் இங்குப் பயிற்றப்படுவதால், மாளுக்கர்கள் பள்ளியில் பெறும் அநுபவங்களே யும், வாழ்க்கையில் குறுக்கிடும் அதுபவங்களேயும் இனத்துக் கற்க வாய்ப்புகள் தரப்பெறுகின்றன. ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி ஆய்வகம் உண்டு : அங்கு அப்பாடத்திற்கு வேண்டிய குழ்கிலே, துனேக் கருவிகள், பிற சாதனங்கள் ஆகிய யாவும் நன்முை றயில் அமைந்திருக் 1. நன்னூல்-நூற்பா. 28.