பக்கம்:அறிவியல் வினா விடை-இயற்பியல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53


நிலையை ஒரு கெல்வின் உயர்த்த ஜூல் அளவில் தேவைப்படும் வெப்ப ஆற்றல்.

94. வெப்பங் கடத்துதிறன் என்றால் என்ன?

ஓரலகு வெப்ப நிலை வாட்டம் நிலவும்போது, ஓரலகு குறுக்குப் பரப்பின் வழியே ஒரு வினாடியில் ஜூல் அளவில் கடத்தப்படும் வெப்ப ஆற்றல்.

95. வெப்பத் தகைவு என்றால் என்ன?

உலோகப் பொருள்களாலான தண்டுகள் வெப்பத்தினால் விரிவடையும் பொழுது உண்டாகும் விசை.

96. இதன் பயன் யாது?

இது பாலங்கள் கட்டுவதில் பயன்படுகிறது.

97. காரணி என்றால் என்ன?

இது மாறிலியைக் குறிக்கும். எ-டு சுருக்கக் கூற்றெண்.

98. ஹென்றி விதியைக் கூறுக.

நிலையான வெப்பநிலையில் ஒரு நீர்மத்தின் வளிக் கரைதிறன், அவ்வளியழுத்தத்திற்கு நேர்வீதத்திலிருக்கும் இதைப் பிரிட்டிஷ் வேதியியலாரும் மருத்துவருமான ஜோசப் ஹென்றி 1801இல் வகுத்தார்.

99. கலோரிமானி (கனல் அளவி) என்றால் என்ன?

உருவாகும் வெப்பத்தை அளக்கப் பயன்படுங் கருவி.

100. சமநீர் எடை என்றால் என்ன?

ஒரு பொருளின் சமநீர் எடை என்பது அதே வெப்ப ஏற்புத்திறனுள்ள நீரின் நிறையாகும். E=ms, E-சமஎடை m - நிறை. S- வெப்ப எண்.

101. இணைமாற்று என்றால் என்ன?

ஜூல் மாறிலி அல்லது வெப்ப எந்திர ஆற்றல் இணைமாற்று.

102. விரிவெண் என்றால் என்ன?

விரிவுத்திறன். வெப்பப் பெருக்கத்திற்கு ஒரு பொருள் உட்படும் நிலையின் அளவு.

103. இதன் வகைகள் யாவை?

நீள் விரிவெண், கனவிரிவெண்.

104. காற்றைத் தட்பமாக்கல் என்றால் என்ன?