பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133.

134.

135.

156.

137.

138.

96

பகுதிகளைக் கணித மூலமாகவோ அலைப்பகுப்புக் கருவி மூலமாகவோ உறுதி செய்யலாம். போரியர் வரிசை என்றால் என்ன? சார்பைச் சைன்களாகவும் கோசைன்களாகவும் முடிவிலா வரிசையாகத் தெரிவிக்கும் முறை. அமைப்புப் பகுப்பு (Systems analysis) என்றால் என்ன? ஒரு நிறுவனத்தின் செயல்களை விரிவாகப் பகுத்துப் பார்த்தல். இதனால் அதன் செயல்திறன் முன்னேறும்; சில சிக்கல்கள் தீர்க்கப்படும். இதற்குக் கணிப்பொறி பெரிதும் உதவுவது. ஒரு தொகுதியின் பகுப்பும் இதில்

இரு சமவெட்டி என்றால் என்ன? ஒரு கோடு, தளம், அல்லது கோணத்தை இரு பகுதி களாகப் பிரிக்கும் ஒரு நேர்க்கோடு அல்லது தளம். தொகுபயன் என்றால் என்ன? பல திசைச்சாரிகளைப் போல் ஒரே விளைவைக் கொண்ட திசைச்சாரி. ஒரே விளைவைக் கொண்ட ஒரு விசை ஒரு விசைத் தொகுதியின் தொகுபயன் ஆகும். அது சமானிக்குக்குத் திசையிலும் அளவிலும் சமம். சமநிலையாக்கி என்றால் என்ன? குறிப்பிட்ட விசைத்தொகுதியைச் சமன்செய்து சம நிலையை உண்டாக்கும் ஒரு தனிவிசை. கொடுக்கப்பட்ட விசைகளின் தொகுபயனுக்கு எதிராகவும் சமமாகவும்

ஒரே கோட்டிலமையும் புள்ளி என்றால் என்ன? A,B,C என்னும் மூன்று புள்ளிகளும் ஒரே கோட்டி லமையப் பின்வரும் நிபந்தன்ைகளில் ஏதேனும் ஒன்று நிறைவு செய்யப்படுதல் வேண்டும். 1. ஏதேனும் இரு வெட்டுத்துண்டுகளின் கூடுதல் மூன்றாவது வெட்டுத்துண்டுக்குச் சமம். 2. AABC இன் பரப்பு = 0. 3. AB இன் சாய்வு = BC இன் சாய்வு 4. AB உம் BC உம் ஒரே சமன்பாட்டை பெற்றிருத்தல்.