பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112


3. நெருக்கடிகள்.

4. உரிமைகள்.

26. சமூக நீதியுள்ள உலகை எவ்வாறு உருவாக்கலாம் என்று அவர் கூறுகிறார்?

கதிரவன் ஆற்றல், மரபாக்கம், தகவல் தொழில்நுட்ப இயல் ஆகிய மூன்றும் இந்த உலகை உருவாக்கும். தொழில் நுட்ப இழுப்புக்கு ஏற்ப ஒழுக்கத் தள்ளலை அளிக்க வேண்டும்.

27. நேரிய உணவு உற்பத்திக்குரிய நான்கு புலங்கள் யாவை என்று அவர் கூறுகின்றார்?

1. உயிரியல் உற்பத்தித்திறனை உயர்த்துதல். 2. உயிரியல் வேற்றுமையைப் பாதுகாத்தல். 3. உயிரியல் இறக்கக்குறைவான பொருள் அதிகரிப்பு. 4. கதிர்வீச்சுப் பண்டுவம், தட்பவியல் ஆகியவற்றில் ஆராய்ச்சி.

28. அறிவியல், தொழில்நுட்ப இயல் ஆகிய இரண்டையும் பற்றி அவர் கூறுவது என்ன?

"ஏழ்மையே, பசியே, அறியாமையே போங்கள். நீங்கள் போங்கள்" என்று கூறுவதற்கு அறிவியலும் தொழில் நுட்பமும் மந்திரக்கோல்கள் அல்ல. அவை மந்திரக் கோல்களான கருவிகளையே வழங்கும். அவற்றைக் கொண்டே நாம் நம் சமுதாய இலக்குகளை அடைய வேண்டும்.

29.ஒரு நாடு நல்லது கெட்டது என்று கூறுவதற்குரிய 11 காரணித் தொகுதிகள் யாவை?

இவை வேளாண்அறிஞர் டாக்டர் சுவாமிநாதன் கூறுவதாகும்.

1. ஊட்டப் பாதுகாப்பு.

2. நீர்ப்பாதுகாப்பு.

3. எழுத்தறிவும் தொழில் நுட்ப மேலாண்மையும்.

4. உடல்நலப் பாதுகாப்பு.

5. உறைவிடம்.

6. சூழ்நிலைப் பாதுகாப்பு.