பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120


26. கருவளர்ச்சியில் அமைப்பியின் விளைவு குறித்து ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஹேன்ஸ் எர்பெமன் 1935இல் பெற்றார்.

27. நரம்புத் துடிப்புகளின் வேதிச்செயலை விளக்கியதற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1936இல் லோவி, டேல் ஆகிய இருவரும் பெற்றனர்.

28. வைட்டமின் C ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

சர் வால்டர் நார்மன் ஹாவொர்த், பி. பால் ஆகிய இருவரும் 1937இல் பெற்றனர்.

29. உயிரியல் கனற்சிச் செயல்களைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஆல்பர்ட் செண்ட் கையோகை, வான் நாசிராபோல்ட் 1937இல் பெற்றார்.

30. வைட்டமின் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?

ரிச்சர்டு குன் 1938இல் பெற்றார்.

31. வைட்டமின் K கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்ற வர்கள் யார்?

கார்ல் பீட்டர் டேம், அடல்பெர்ட்டாய்சி ஆகிய இருவரும் 1943 இல் பெற்றனர்.

32.பெனிசிலின் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசுபெற்றவர்கள் யார்?

அலெக்சாண்டர் பிளமிங், சர் எர்னஸ்ட் போரிஸ் செயின், கோமகன் ஹோவர்டு வால்டர் ஆகிய மூவரும் 1945இல் பெற்றனர்.

33. ஊட்ட வேதியியல், வேளாணியல் ஆகிய இரு துறைகளுக்கு நோபல் பரிசு பெற்றவர் யார்?

அர்டுரி இல்மாரி விர்டானன் 1945இல் பெற்றார்.

34. காரமங்களின் உயிரியல் சிறப்பை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

சர் இராபர்ட் இராபின்சன் 1947இல் பெற்றார்.