பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82



1. மிதப்பிகள் - உல்பியா.
2. தொங்கிகள் - பாசிகள்.
3. வேர் ஊன்றிகள் - வேலசினேரியா
4. வேர் மிதப்பிகள் - அல்லி.
5. இருநிலைவாழ்விகள் - நாணல்.

38. வளநில வாழ்விகள் யாவை?

வளநிலத்தில் வாழும் பூவரசு, பலா முதலியவை.

39. வறண்டநில வாழ்விகள் யாவை?

1. இயல்நிலை வறண்டநில வாழ்விகள் - சப்பாத்தி.
2. உடலியல் வறண்ட நிலவாழ்விகள் - கடல்புன்னை.
3. உப்புநிலவாழ்விகள் - கண்டல்.

40. வறண்டநில வாழ்விகள் யாவை?

வறண்ட சூழ்நிலையில் வாழும் தாவரங்கள். நீர்ப்பற்றாக் குறை, அதிகவெப்பநிலை, ஊட்டப் பொருள் குறைவு, அதிக ஆழம் முதலியவை வறண்ட நிலைகள். இலைகள் நீராவிப்போக்கைக் குறைக்க உருமாற்றம் பெறும். அவை இலைத்தொழில் தண்டாகவோ இலைத்தண்டாகவோ மாறும். வேர்கள் நீண்டிருக்கும். எ-டு சப்பாத்தி, கத்தாழை, அரளி, சுரபுன்னை.

41. நடுநிலைவாழ்விகள் என்றால் என்ன?

வளநிலத் தாவரங்கள் இலை, தண்டு, வேர் என்னும் உறுப்பு வேறுபாடு உண்டு. வளர்சூழ்நிலைகளில் வாழ்பவை. எ-டு. பூவரசு, ஆல்.

42. உப்பிட வாழ்வி என்றால் என்ன?

உப்புநீரில் வாழ்கின்ற தாவரம். அதாவது சதுப்புநிலத்தாவரம். எ-டு. அவிசீனியா.

43. உப்பிட வாழ்விகள் எங்குக் காணப்படும்?

பொதுவாகக் கடலுக்கு அடுத்துள்ள உப்பங்கழியில் காணப்படும்.

44. பாலைவனம் என்றால் என்ன?

பெரிய வட்டாரச் சமுதாயம். குறைந்த மழையும் மிகக்குறைந்த அளவு தாவர வளமும் உள்ளது. எ-டு சகாரா.

45. உயிர்ச்சமுதாயம் என்றால் என்ன?