பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90



பாதுகாப்பு என்று பெயர்.

20. மண்வளப் பாதுகாப்பு முறைகள் யாவை?

1. காற்றைத் தடுத்து நிறுத்த மரங்களைப் பயிரிடுதல்.
2. நிலங்களைத் தரிசுபோடாமல் சாகுபடி செய்தல்.
3. மாற்றுப்பயிரிடல்.
4. அடிக்கடி நீர் பாய்ச்சுதல்.
5. எரு அடித்தல்.
6. புழுதி உழுதல்.
7. எருவிடுதல்.
8. பாள முறையில் பயிரிடுதல்.

21. மண்காரணிகள் என்பவை யாவை?

நீரடக்கம், பிஎச், கரிமப்பொருள், மண்நயம்.

22. இவற்றின் சிறப்பென்ன?

இவை ஒருவாழிடத்தில் இன்றியமையாத இயைபுறுப்பாக அமைபவை. தாவரப்பரவலில் அதிக செல்வாக்கு உள்ளவை.

23. மாற்றுப்பயிரிடல் (பயிர்ச்சுழற்சி) என்றால் என்ன?

களைத்த நிலத்திற்கும் ஊட்டமளிக்க ஒரு பருவத்தில் ஒரு பயிரும் (கடலை) அடுத்த பருவத்தில் வேறு ஒரு பயிரும். (பயிறு) சாகுபடி செய்யப்படுகின்றன. அல்லது ஒரு பருவத்தில் குறுவையும் மற்றொரு பருவத்தில் சம்பாவும் பயிரிடப்படுகின்றன.

24. நாற்றுநோய் என்றால் என்ன?

மண்ணிலுள்ள பூஞ்சையினால் நாற்றுகளுக்கு உண்டாகும் நோய்.

25. கரிப்பூட்டைநோய் என்றால் என்ன?

ஒட்டுண்ணிப் பூஞ்சைகளால் ஏற்படுவது. நெற்பயிரின் மணிகளுக்குப் பதிலாகக் கரிய சிதல்களை உண்டாக்கும்.

26. வேளாண்மை என்றால் என்ன?

மனிதன் ஈடுபடும் பல்வேறுபட்ட பொருளாதாரச் செயல்களில் ஒன்று. அது மனிதன் தன் வாழ்க்கை நடைபெறுவதற்காக ஏற்படுத்திக் கொண்ட ஓர் இன்றியமையாத தொழில்.