பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95



27. வேளாண்மையின் இன்றியமையாமை என்ன?

1. முதன்மையான உணவுப் பொருள்களை அளிப்பது. அரிசி, கோதுமை.
2. நார்ப்பொருள்களையும் தொழிற்சாலை மூலப் பொருள்களையும் அதிகம் அளிப்பது.
3. பண்ணைமுறை என்பது வேளாண்மையில் ஒரு புதிய முறை.

28. எரு என்றால் என்ன?

உழுநிலத்தை வளப்படுத்தச் சேர்க்கும் ஊட்டப்பொருள். சாணம், தழை முதலியவை இயற்கை ஊட்டப்பொருள்கள்.

29. தொழுஉரம் என்றால் என்ன?

குச்சிவடிவ உயிர்வினையால் தாவரப் பொருள் சிதைதல். இதனால் செழிப்பான மண் தாவரத்திற்குக் கிடைக்கும்.

30. மட்கு என்றால் என்ன?

குப்பைகூளங்கள் இலைதழைகள் நுண்ணுயிரிகளால் சிதைக்கப்பட்டு மண்ணோடு மண்ணாதல். நல்ல எரு.

31. அசொட்டோபேக்டர் என்றால் என்ன?

இவை நைட்ரஜனை நிலைநிறுத்தும் குச்சிவடிவ உயிரிகள். வேளாண்மையிலும் தோட்டக்கலையிலும் சிறப்புள்ளவை. எ-டு. நைட்ரசமோனாஸ் என்னும் குச்சிவடிவ உயிரி அம்மோனியாவை நைட்ரேட்டு என்னும் உப்பாக ஆக்சிஜன் ஏற்றம் அடையச் செய்யும். இந்த உப்பை நைட்ரோபேக்டர் என்னும் குச்சிவடிவ உயிரி நைட்ரைட்டு என்னும் உப்பாக மாற்றும்.


19. உயிர்மலர்ச்சியும் மரபியலும்.

1. உயிர்மலர்ச்சியை அல்லது பரிணாமத்தை நன்கு விளக்கிய இரு அறிவியல் அறிஞர்கள் யார்?

தார்வின், மெண்டல்.

2. உயிர்மலர்ச்சி என்றால் என்ன?