பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


125. 126. 127. 128. 129. 130. 151. 132. 155. 154. 135 எத்துறைக்காக அவர் பரிசு பெற்றார்? நலப் பொருளியல். இந்தியா எவ்வகைப் பொருளாதாரத்தைப் பின்பற்றுகிறது? கலப்புப் பொருளாதாரத்தை. கலப்புப் பொருளாதாரம் என்றால் என்ன? தனியார் துறையும், பொதுத் துறையும் சேர்ந்து செயற்பட்டுப் பொருள்வளத்தை உயர்த்தும் பொருளா தார நிலை. இந்தியப் பசுமைப்புரட்சிக்கு காரணமான இந்திய வேளாண் அறிவியலார் யார்? டாக்டர் எம். சுவாமிநாதன், டாக்டர் பால். தரமணியிலுள்ள ஆராய்ச்சி நிறுவனத்தின் பெயர் என்ன? எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம். வணிகத்தின் சிறப்பென்ன? ஒரு நாட்டின் பொருளியல் வளர்ச்சி வணிகத்தைப் பொறுத்தே அமைவது. வணிகம் எத்தனை வகைப்படும்? 1. உள்நாட்டு வணிகம் 2. அயல்நாட்டு வணிகம் உள்நாட்டு வணிகம் என்றால் என்ன? ஒரு பகுதியிலிருந்து பற்றாக்குறை உற்பத்தியுள்ள வேறொரு பகுதிக்குப் பொருள்கள் விற்பதையும் தேவை யானவற்றை வாங்குவதையும் உள்நாட்டு வணிகம் என்கிறோம். ஒர் எடுத்துக்காட்டு தருக. கங்கைச் சமவெளியிலிருந்து சணல் பொருள்கள் தமிழ் நாட்டுக்கு வருகின்றன. அதே போல் தென்நாட்டிலிருந்து அரிசி, எண்ணெய் வித்துகள், நறுமணப் பொருள்கள் முதலியவை வடநாட்டுக்குச் செல்கின்றன. வணிகச் சமநிலை என்றால் என்ன? ஒரு நாட்டின் ஏற்றுமதிகளின் மதிப்பீட்டுக்கும் இறக்கும திகளின் மதிப்பீட்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு வணிகச் சமநிலை எனப்படும்.